முந்தய பக்கம்

வாக்காளர்களுக்கு லஞ்சம் சி. விஜயபாஸ்கருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

yesterday
வாக்காளர்களுக்கு லஞ்சம்  சி. விஜயபாஸ்கருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

வாக்காளர்களுக்கு லஞ்சம் சி. விஜயபாஸ்கருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்கா ளர்கள் தமக்கு ஆதரவாக வாக்களிக்கு மாறு ரூ. 10,000 மற்றும் ரூ. 2,000 மதிப்பி லான பிரிட்ஜ் கூப்பன்களை சி. விஜய பாஸ்கர் விநியோகித்ததாகவும், இது தேர்தல் முறைகேடு என்பதால், சி. விஜய பாஸ்கரின் வெற்றியை செல்லாது என அறி விக்குமாறும் திமுக வேட்பாளர் கே.கே. செல்லப்பாண்டியன் சென்னை உயர் நீதி மன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந் தார். இந்த வழக்கு நீதிபதி என். செந்தில் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கூப்பன்கள் விநியோ கிக்கப்பட்டதற்கான ஆதாரங்களை மனுதாரர் சுட்டிக்காட்டிய தையடுத்து வழக்கை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, சி. விஜயபாஸ்கர் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு உத்தர விட்டு விசாரணையை மூன்று வாரங் களுக்கு ஒத்திவைத்துள்ளது. சி. விஜயபாஸ்கர், ஏற்கெனவே தமது எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram