திருப்பூர் ஆட்சியராக சி.முத்துக்குமரன் பொறுப்பேற்பு
30 Oct 2026, 12:15 am

திருப்பூர் ஆட்சியராக சி.முத்துக்குமரன் பொறுப்பேற்பு

திருப்பூர், அக்.29-திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய மனிஷ் நாரணவரே தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேஷன் மேலாண்மை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சி.முத்துக்குமரன், திருப்பூர் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, வியாழனன்று மாலை பொறுப்பேற்ற முத்துக்குமரனுக்கு, மாவட்ட சகஅலுவலர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதன்பின் சி.முத்துக்குமரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருப்பூர் மாவட்டத்தில் எனது பணியை தொடங்குவதில் பெருமகிழ்ச்சி. வரும் ஒரு மாதத்திற்குள் மாவட்டத்தின் தற்போதைய சூழ்நிலைகளை முழுமையாக புரிந்து கொண்டு, பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக தீர்வு காணமாவட்ட நிர்வாகம் சிறப்பாக வழி நடத்தப்படும். திருப்பூர் மாவட்டத்திற்கு தொழிற்துறையின் வளர்ச்சி எந்தளவுக்குத் தேவையோ, அதேபோல் குடிநீரும் விவசாயமும் அவசியமானவை. எந்த ஒரு துறையையும் பாதிக்காமல், நவீன தொழில்நுட்பங்களை சட்டம் ஒழுங்கு, சாயக்கழிவு சுத்திகரிப்பு போன்ற

வற்றை முறையாக அமல்படுத்தி அனைத்துத் துறைகளும் சமமாக வளர நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூர்ஏற்கனவே அமைதியான மாவட்டமாகும். வெளி மாநில தொழிலாளர்கள் மற்றும் பொது மக்களின் தேவைகள் என்னவென்பதை அறிந்து, அதற்குரியகாலத்தில் உரியநடவடிக்கைகள் மூலம் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.மாவட்டத்தில் வசிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் மற்றும் பொது மக்களின் சரியான கணக்கெடுப்புப்பணிகள் பிப்ரவரி மாதத்தில் வீடு வீடாக சென்று முறையாக மேற்கொள்ளப்படும். பொதுமக்களின்ஒத்துழைப்போடும், வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளின் முழு ஒத்துழைப்போடும் மாவட்டத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் வளர்ச்சிப் பணிகள் சிறப்பான முறையில் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார்.