பணி நிறைவு பாராட்டு விழா
13 May 2026, 1:20 am
<p><strong>பணி நிறைவு பாராட்டு விழா</strong></p><p>ஈரோடு, மே 12- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் முன் னாள் மாநிலச் செயலாளர் சி.ஜோதிமணியின் பணி நிறைவு பாராட்டு விழா திங்களன்று நடைபெற்றது. சி.ஜோதிமணி பணி நிறைவு பாராட்டு விழா ஈரோடு மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில், மண்டலச் செயலாளர் பி.ஸ்ரீதேவி தலைமையில் நடைபெற்றது. மேட்டூர் கிளை தலைவர் கே.சுந்தர்ராஜன் வரவேற் றார். சிஐடியு மாநிலப் பொருளாளர்.எஸ்.ராஜேந்தி ரன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலை வர் எஸ்.கண்ணன், மாநில பொதுச் செயலாளர் டி. ஜெய்சங்கர், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே. மாரப்பன், ஓய்வு பெற்ற மின்வாரிய நல அமைப்பு ஈரோடு கிளை தலைவர் கே.குப்புசாமி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று பேசினர். நிறைவாக சி. ஜோதிமணி ஏற்புரையாற்றினார். முடிவில், மேட்டூர் அனல் கிளை செயலாளர் எஸ்.செந்தில்வேலன் நன்றி கூறினார். இதில் திரளானோர் பங்கேற்றனர்.</p>
