சி. கோவிந்தராஜன் 18-வது நினைவு தினம்
27 Jan 2026, 3:28 pm
<p><strong>சி. கோவிந்தராஜன் 18-வது நினைவு தினம்</strong></p>
<p>சிஐடியு ஸ்தாபக தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சி. கோவிந்தராஜனின் 18-வது நினைவுதினத்தை முன்னிட்டு நெல்லிக்குப்பத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சிஐடியு மாவட்ட தலைவர் பி. கருப்பையன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிபிஎம் மாவட்ட செயலாளர் கோ. மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி. உதயகுமார், வி. சுப்பராயன், சிஐடியு மாவட்ட செயலாளர் டி. பழனிவேல், மாவட்ட நிர்வாகிகள் வி. கிருஷ்ணமூர்த்தி, வி. திருமுருகன், எஸ். சாந்தகுமாரி, கே. ஸ்டாலின், கே. மீரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் போக்குவரத்து சங்க முன்னாள் தலைவர் ஜி. பாஸ்கரன், மீன்பிடி சங்க மாவட்ட தலைவர் பி. பாலு, மற்றும் நிர்வாகிகள் எஸ். பன்னீர்செல்வம், டி. தனசேகரன், எ. மகேஷ், ஆர்.வி. சுப்பிரமணியன், வழக்கறிஞர் ஜமிக்கி ராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.</p>
