தேங்காய் பருப்பு ஏலம்
10 Mar 2026, 3:51 pm
<p><strong>தேங்காய் பருப்பு ஏலம்</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 10- காங்கயம் பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்ப னைக் கூடத்தில் தேங்காய் பருப்பு மறைமுக ஏலம் திங் களன்று நடைபெற்றது. இதில் காங்கேயம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 1,478 கிலோ தேங்காய் பருப்பை (கொப்பரை) விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். இதில் ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை யானது. அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.145 க்கும், குறைந்த பட்சமாக ரூ.110-க்கும், சராச ரியாக ரூ.144 க்கும் ஏலம் போனது.</p>
