தமிழ்நாடு உட்பட 4 மாநில இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!
6 Oct 2026, 6:15 pm

தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

தமிழ்நாட்டின் மதுராந்தகம், தாராபுரம், புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதியிலும், மேற்குவங்கத்தின் நந்திகிராம், ரெஜிநகர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளிலும், அசாம் மாநிலத்தின் நாகான் நாடாளுமன்ற தொகுதியிலும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கியது.

இந்த நிலையில், ஒரு நாடாளுமன்ற தொகுதி மற்றும் 5 சட்டமன்ற தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

மாலை 5 மணி நிலவரப்படி, மதுராந்தகத்தில் 83.86% வாக்குகளும், தாராபுரத்தில் 78.53% வாக்குகளும், தட்டாஞ்சாவடியில் 78.83% வாக்குகளும், நந்திகிராமில் 79.39% வாக்குகளும், ரெஜிநகரில் 78.42% வாக்குகளும், நாகானில் 76% வாக்குகளும் பதிவாகியுள்ளன.