3 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!
2 Jul 2026, 4:36 pm

பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் காலியாகவுள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் ஜூலை 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் பாங்கிபூர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த நிதின் நவீன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார். மத்தியப் பிரதேச மாநிலத்தின் தடியா சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த ராஜேந்திர பாரதி ஊழல் புகாரில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். குஜராத்தின் மஞ்சல்பூர் எம்.எல்.ஏ. யோகேஷ்பாய் நரந்தாஸ் படேல் உடலநலக் குறைவால் உயிரிழந்தார். காலியாக உள்ள இந்த 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் ஜூலை 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

ஜூலை 6 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும், ஜூலை 13 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும், ஆகஸ்ட் 3 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாட்டில் 7 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருக்கு நிலையில், தமிழ்நாடு இடைத்தேர்தல் தொடர்பான எந்த அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.