இடைத்தேர்தல் வாக்குப்பதிவு - பிற்பகல் 1 மணி நிலவரம்
yesterday

நாடு முழுவதும் 5 சட்டமன்ற தொகுதிகளிலும், ஒரு நாடாளுமன்ற தொகுதியிலும் நடைபெறும் இடைத்தேர்தலின் பிற்பகல் ஒரு மணி நிலவரம் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும், புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதியிலும், மேற்குவங்கத்தின் நந்திகிராம், ரெஜிநகர் என மொத்தம் 5 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல், அசாம் மாநிலத்தின் நாகான் நாடாளுமன்ற தொகுதியிலும் இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு - 1 மணி நிலவரம்:

தமிழ்நாட்டின் இரு தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி, மதுராந்தகத்தில் 55.19% வாக்குகளும், தாராபுரத்தில் 56.09% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

புதுச்சேரி - 1 மணி நிலவரம்:

புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.27% வாக்குகள் பதிவாகியுள்ளன.

மேற்கு வங்கம் - 1 மணி நிலவரம்:

மேற்கு வங்கத்தில் இரு தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி, நந்திகிராம் தொகுதியில் 60.32% வாக்குகளும், ரெஜிநகர் தொகுதியில் 56.43% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அசாம் - 1 மணி நிலவரம்:

அசாம் மாநிலத்தின் நாகான் நாடாளுமன்ற தொகுதியில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 58.81% வாக்குகளும் பதிவாகியுள்ளன.