தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேர்தல் வழக்குகள் முடிந்ததும் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்! தேர்தல் ஆணையம் விளக்கம்

30 Sept 2026, 10:56 pm
தேர்தல் வழக்குகள் முடிந்ததும் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்! தேர்தல் ஆணையம் விளக்கம்

தேர்தல் வழக்குகள் முடிந்ததும் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்! தேர்தல் ஆணையம் விளக்கம்

சென்னை, செப். 30 -தேர்தல் வழக்குகள் முடிந்ததும் 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்தத் தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர். தலைமை நீதிபதிதர்மாதிகாரி,நீதிபதிஅருள்முருகன் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில், இடைத்தேர்தல் அறிவிக்கப்படாதது நிரந்தரமானதல்ல என்றும், வழக்கை உயர்நீதிமன்றம் முடித்த பின் தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது. தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட முதல் நாளிலேயே தேர்தல் நடத்த வேண்டும் என மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் கூறவில்லை என்றும், அதற்கு 6 மாத அவகாசம் அளித்துள்ளதாகவும் ஆணையம் சுட்டிக்காட்டியது. தேர்தல் வழக்குகளை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும், அதே காலத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்என்றும் சட்டம் கூறுவதாகத் தெரிவித்தது.

பெருந்துறை தொகுதி தேர்தல் வழக்கு நிராகரிக்கப்பட்டதால் அத்தொகுதி காலியாக உள்ளது. எனினும் மேல்முறையீடு செய்ய நவம்பர் 24 வரை அவகாசம் இருப்பதால், சட்டப்படி முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் ஆணையம் கோரிக்கை விடுத்தது.

முன்னதாக, முதல்வர் விஜய், முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா ஆகியோர் தரப்பில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் எனவும், தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என திருச்சி கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தரப்பிலும் வாதங்கள் வைக்கப்பட்டன. முடிவில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.