கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
21 Dec 2025, 3:21 pm

தனியார் கல்லூரியில் வணிக கண்காட்சி

நாமக்கல் டிச.21- திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில் மூன்று நாள் வணிக கண்காட்சி நடைபெற் றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ். ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மேலாண்மைத் துறை சார்பில், டிச.19,20, 21 ஆகிய மூன்று நாட்கள் வணிகக் கண் காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியினை அறம் பவுண் டேஷன் நிர்வாக இயக்குநர் கீர்த்திகா சிவகுமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களின் தலை வர் ஆர்.சீனிவாசன், கல்லூரியின் முதல்வர் ம.பிரசன்ன ராஜேஷ்குமார், புலத் தலைவர் செ.ராமசாமி, வணிக மேலாண்மை துறை தலைவர் மா.பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கண்காட்சியில் சுமார் 100 அரங்கு கள் அமைக்கப்பட்டு, பல்வேறு வர்த்தக நிறுவனங்களே நேர டியாகத் தங்கள் பொருட்களை விற்பனை செய்தன.

உதகையில் மைனஸ் 0.2 டிகிரி வெப்பநிலை

உதகை, டிச.21- நீலகிரி மாவட்டத்தில் உறைபனி தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஞாயிறன்று குறைந்தபட்ச வெப்பநிலையாக மைனஸ் 0.2 டிகிரி பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக உறைபனி பொழிவு காணப்படுகிறது. உதகை அரசு தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், காந்தள், தலைக்குந்தா, கேத்தி ஆகிய பகுதிகளில் புல்வெளிகளில் வெள்ளை கம்பளம் போர்த்தி யது போல உறைபனி பொழிவு காணப்படுகிறது. சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் மீது, அரை அங்குலத் திற்கு பனிப்பொழிவு காணப்படுகிறது. காலையில் வெயில் வந்த பிறகே வீட்டை விட்டு வெளியே வர முடிகிறது. இந்நிலை யில், ஞாயிறன்று குறைந்தபட்ச வெப்பநிலையாக உதகை நகரில் மைனஸ் 0.2 டிகிரி பதிவாகியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்

மேட்டுப்பாளையம், டிச.21- ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் ஞாயிறன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நூறு நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கியதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஞாயிறன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் ரங்கராஜ் தலைமை வகித்தார். இதில் நகரத் தலைவர் தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வடக்கு மாவட்டத் தலைவர் சர வணன் தலைமை வகித்தார். இதில் மாநில செய்தி தொடர்பா ளர் கோதண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.