இந்தியா மீதான 500% வரி விதிப்புக்கு வணிகர் சங்கங்கள் கண்டனம்
10 Jan 2026, 2:48 pm
<p><strong>இந்தியா மீதான 500% வரி விதிப்புக்கு வணிகர் சங்கங்கள் கண்டனம்</strong></p>
<p>சென்னை, ஜன.10- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா மீது 500 சதவீத வரி விதிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க எம்.பி லிண்ட்சே கிர ஹாம் தெரிவித்துள்ளதை அடுத்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண் டாம் முறை பதவி ஏற்றதும் வரி விதிப்பில் தலைகீழ் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். இந்தியா அமெரிக்காவுக்கு அதிகளவில் ஏற்று மதி செய்கிறது என்று கூறி, இந்தியா மீது 50 சதவீத வரிகளை விதித் துள்ளார். இதற்கு ரஷ்ய கச்சா எண் ணெய்யை இந்தியா இறக்குமதி செய்வதையும் முக்கிய காரணமாக குறிப்பிட்டிருந்தார். மேலும், விரை வில் அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்துக்கு வரவில்லை என்றால், இந்தியா மீதான வரி அதிகரிக்கப்ப டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத் திருந்தார். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அதிபர் இந்தியாவிற்கு எதிராக பல கடுமையான நடவடிக் கைகள் எடுத்து வருவதை ஜன நாயக அமைப்பின் அடிப்படையில் இயங்கும் பல்வேறு நாடுகள் உன்னிப் பாக கவனித்து வருவதாகக் குறிப் பிடப்பட்டுள்ளது. பதவி ஏற்ற முதல் நாளிலேயே தற்காலிக குடியுரிமை பெற்று அமெ ரிக்காவில் பணியாற்றி வந்த இந்திய வம்சாவளியினரை உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற்று வதற்கான கடுமையான நடவடிக்கை களை எடுத்ததாகவும், அதைத் தொ டர்ந்து அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய வம்சாவளி ஊழியர்கள் தங்கள் தாய் நாட்டுக்கு அனுப்புகிற ஊதியத்தின் மீது அதீத வரி விதித்திட நடவடிக்கைகள் மேற்கொண்ட தாகவும் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஒரு பொருளை வாங்குவதற் கான உரிமையும் விற்பதற்கான சுதந் திரமும் ஒவ்வொரு வணிகத்திற் கும், வணிகம் சார்ந்த வணிகருக்கும் தான் உண்டு என்றும், ஒரு நாட்டின் குடிமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதை தீர்மா னிக்கும் உரிமையும், விற்பதற்கான சுதந்திரமும் ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையைச் சார்ந்ததாகும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப் பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அமெ ரிக்க அதிபரின் ஏகாதிபத்திய எண்ணத் தையும் செயலையும், இந்தியா விற்கு எதிரான தனது அதிகார அத்து மீறலை வெளிப்படையாக பிரதி பலிப்பதாகவே தெரிகிறது என்று அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய வணிகர்கள், குறிப்பாக தமிழகத்து வணிகர்கள் அந்நிய நாட்டின் அடிமைத்தன நடவடிக்கை களுக்கு என்றும் துணை போக மாட்டார்கள் என்பதோடு, நமக்கான பொருட்களை நாமே தயாரித்து பாரம்பரிய வணிகத்தை பாதுகாப் போம் என்று உறுதியளிக்கப்பட்டு உள்ளது.</p>
