தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

9 Mar 2026, 4:24 pm
சென்னை விரைவு செய்திகள்

வேலூர் சண்டே மார்க்கெட்டில் வர்த்தகம் பாதிப்பு

வேலூர், மார்ச் 9- வேலூர் கோட்டை அருகே லாங்கு பஜார் முதல் பில்டர்பெட் ரோடு வரை நடைபெறும் புகழ்பெற்ற ‘சண்டே மார்க்கெட்டில்’, ஞாயின்று  வெயிலின் தாக்கம் அதிக மாக இருந்ததால் மக்கள் வருகை குறைந்து வர்த்தகம் மந்த மானது.  பழங்கால கலைப் பொருட்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், ஜிம் உபகரணங்கள் மற்றும் புத்தகங்கள் எனப் பலதரப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும் இந்தச் சந்தையில், 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். வழக்கமான விற்பனையை விட இந்த வாரம் வர்த்தகம் குறைந்து, சுமார் ரூ.22 லட்சத்திற்கு மட்டுமே விற்பனை நடந்ததாக வியாபாரிகள் கவலை யுடன்

தெரிவித்தனர். 6 கம்பெனி துணை ராணுவப்படையினர்  காட்பாடிக்கு வருகை

வேலூர், மார்ச் 9-  சட்டமன்ற தேர்தல் பாதுகாப்புப்பணிக்காக 6 கம்பெனி மத்திய துணை ராணுவப்படையினர் வேலூருக்கு வருகை தந்தனர். தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணை யம் தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல் தேர்தல் பாதுகாப்புக்காக துணை ராணுவப்படைகளை தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு: 173 தேர்வர்கள் பங்கேற்பு!

ராணிப்பேட்டை, மார்ச் 9- ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வு வரும் ஞாயிறன்று (மார்ச் 15) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார். வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் 173 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வர்கள் எளிதாக வந்து செல்ல சிறப்புப் பேருந்துகள், தடையற்ற மின்சாரம் மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணி மற்றும் மதியம் 2 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால், தேர்வர்கள் முன்கூட்டியே வருகை தருமாறும், நுழைவுச் சீட்டை www.tnpsc.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

ஒடுகத்தூரில் காட்டுத் தீ

வேலூர், மார்ச் 9- வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பீஞ்சமந்தை மலை கிராமப் பாதையில் உள்ள மூங்கில் காட்டில் திடீரென காட்டுத் தீ பற்றி எரிந்தது. அந்த வழியாக ரோந்து சென்ற வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் முத்துச்செல்வன் மற்றும் காவலர்கள், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். விலை உயர்ந்த மரங்கள் மற்றும் மூலிகைகள் நிறைந்த சுமார் 25 ஆயி ரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இப்பகுதியில், சமூக விரோதிகளால் அடிக்கடி தீ வைக்கப்படுவது தொடர்கதை யாகி வருகிறது. வனத்துறையினர் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தி, அத்துமீறி நுழைபவர்கள் மீது கடுமையான வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், வனம் பாது காப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.