பேருந்து நிலையக் கடைகள் சிறுவியாபாரிகளிடம் ஒப்படைப்பு
14 Mar 2026, 2:57 pm
<p><strong>பேருந்து நிலையக் கடைகள் சிறுவியாபாரிகளிடம் ஒப்படைப்பு</strong></p>
<p>திருவள்ளூர், மார்ச் 14- திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பஜார் ஜிஎன்டி சாலை முதல் ரெட்டம்பேடு சாலை வரை பல தலைமுறைகளாக வியாபாரம் செய்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவியாபாரிகளின் கடைகள், போக்குவரத்து நெரிசல் எனக் கூறி கடந்த காலங்களில் நெடுஞ்சாலைத்துறையினரால் அகற்றப்பட்டன. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், தங்களுக்குக் கடைகள் ஒதுக்கக் கோரி சிஐடியு திருவள்ளூர் மாவட்ட சிறுவியாபாரிகள் சங்கம் சார்பில் பல ஆண்டுகளாகத் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் பலனாக, கடந்த ஆண்டு கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகத்தால் பேருந்து நிலையத்தில் கடைகள் கட்டப்பட்டன. ஓராண்டாகியும் கடைகள் ஒதுக்கப்படாததால், மீண்டும் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், பேரூராட்சி நிர்வாகம் கடைகளை ஒப்படைக்க முன்வந்தது. அதன்படி, சனிக்கிழமை (மார்ச் 14) பேருந்து நிலையக் கடைகள் சிறுவியாபாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. பேரூராட்சித் தலைவர் சகிலா அறிவழகன் முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், சிறுவியாபாரிகள் சங்கப் பகுதித் தலைவர் வி.ஜோசப், மாவட்டச் செயலாளர் வி.குப்பன், விவசாயத் தொழி லாளர்கள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் இ.ராஜேந்திரன், வட்டச் செயலாளர் ப.லோக நாதன், விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் எம்.சி.சீனு, மாவட்டத் துணைத் தலைவர் வி.ஆர்.லட்சுமணன், பேரூராட்சித் துணைத் தலைவர் கேசவன், கவுன்சிலர்கள் அர்ஜுனன், காளிதாஸ் மற்றும் அப்துல் கரீம் ஆகியோர் பங்கேற்றனர். நீண்ட போராட்ட த்திற்குப் பிறகு கடைகள் கிடைத்த மகிழ்ச்சியில் வியாபாரிகள் இனிப்புகள் வழங்கித் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.</p>
