தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகள்: மண்டல செயற்பொறியாளர் ஆய்வு

10 Jan 2026, 2:48 pm
பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகள்: மண்டல செயற்பொறியாளர் ஆய்வு
<p><strong>பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகள்: மண்டல செயற்பொறியாளர் ஆய்வு</strong></p> <p>மேட்டுப்பாளையம், ஜன.10- ரூபாய் 8 கோடியே 63 லட்சம் மதிப்பில் மேட்டுப் பாளையம் பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகள் நடை பெற்று வரும் நிலையில், மண்டல செயற்பொறியாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து உள்ளூர் மற்றும் நீலகிரி, கோவை, &nbsp;திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் மற்றும் கேரளம், &nbsp;கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களுக்கு தினசரி &nbsp;பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து &nbsp;நிலையம் கட்டி 40 ஆண்டுக்கும் மேலானதால் பேருந்து &nbsp;நிலையம் மற்றும் அதனுள் உள்ள வணிக வளாக கட்டி டங்கள் பழுதடைந்து காணப்பட்டன. இதனால் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு &nbsp;கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2023-24 இன் &nbsp;கீழ் ரூபாய் 8 கோடியே 63 லட்சம் அரசு நிதி ஒதுக்கி &nbsp;பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகள் தொடங்கியது. &nbsp;பழைய கடைகளை இடித்து விட்டு புதிதாக 26 கடைகள் &nbsp;கட்டும் பணிகள் பேருந்து ஓடுதளம், கழிப்பறைகள், பய ணிகள் நிழல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 80 சதவீத கட்டுமானப் பணிகள் முடிவ டைந்து விட்ட நிலையில், பேருந்து நிலையத்தின் கிழக்கு புறம் தாய்மார்கள் பாலூட்டும் அறை, மின் அறை, &nbsp;பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் முன்பதிவு அலுவ லகம் ஆகிய கட்டுமானப்பணிகள் தற்போது தொடங்கப் படவுள்ளது. இதனையொட்டி வெள்ளியன்று திருப்பூர் &nbsp;மண்டல செயற்பொறியாளர் சேர்மகனி பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்டுமானப் பணிகள் குறித்து நக ராட்சி பொறியாளர் சரவணகுமார் உதவி பொறியாளர் பிரபாகர் ஆகியோரிடம் கேட்டறிந்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.