கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
18 Feb 2026, 3:04 pm

மலை கிராமத்திற்கு பேருந்து இயக்கம்: மக்கள் வரவேற்பு

ஈரோடு, பிப்.18- சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகே உள்ள மலைக்கிராமத்திற்கு முதல்முறையாக இயக்கப்பட்ட அரசு பேருந்தை, பழங்குடியின மக்கள் இசைக்கருவிகள் இசைத்து வரவேற்றனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பகுதியில் அடர்ந்த வனத்தில் காளிதிம்பம் என்ற மலைக்கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு முறையான போக்குவரத்து வசதி இல்லாததால், அப்பகுதி மக்கள் வேலை உள்ளிட்டவற் றுக்காக சுமார் 2 கி.மீ. தொலைவு அடர்ந்த வனத்துக்குள் நடந்து சென்று வந்தனர். இந்நிலையில், வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ள காளிதிம்பம் கிராமத்திற்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடல்ந்து, காளி திம்பம் பகுதியில் பழங்குடியின நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதுடன், இக்கிராமத்துக்கு பேருந்து இயக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரைத்தனர். அதன் பேரில், சத்தியமங்கலத்தில் இருந்து தலமலை வழியாக தாளவாடிக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்தை காளி திம்பம் மலைக் கிராமத்துக்கு நாள்தோறும் காலை, மாலை என இரு வேளை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முதல் பேருந்து சேவை செவ்வாயன்று துவங்கப்பட்டது. தங்க ளது கிராமத்துக்கு முதல் முறையாக வந்த அரசுப் பேருந் தை பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய இசைக் கருவிகளை இசைத்து வரவேற்றனர். மேலும், பேருந்தை இயக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு பயனாடை அணிவித்து கெளரவித்தனர்.

ஹோலி பண்டிகை: சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஹோலி பண்டிகை: சிறப்பு ரயில்கள் இயக்கம் கோவை, பிப்.18- ஹோலி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மற்றும் பீகார் மாநிலம் முசாபர்பூர் இடையே கோவை வழியாக 12 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ள தாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஜி. மரியா மைக்கேல் வெளியிட்ட செய்திக்கு றிப்பில் கூறியதாவது, எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் மார்ச் 27 ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமை தோறும் இரவு 09.30 மணிக்கு இந்த சிறப்பு ரயில் (06085) புறப்படும். இந்த ரயில் சனிக்கி ழமை அதிகாலை 02.27 மணிக்கு கோவை ரயில் நிலை யத்தை வந்தடைந்து, 02.30 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். தொடர்ந்து திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட் டை வழியாக திங்கட்கிழமை காலை 07.30 மணிக்கு முசா பர்பூரை சென்றடையும். மறுமார்க்கமாக, முசாபர்பூரில் இருந்து பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் மார்ச் 30 ஆம் தேதி வரை திங்கட்கிழமை தோறும் இரவு 09.15 மணிக்கு இந்த சிறப்பு ரயில் (06086) புறப்படும். இந்த ரயில் வியா ழக்கிழமை அதிகாலை 03.47 மணிக்கு கோவை ரயில் நிலை யத்தை வந்தடைந்து, 03.50 மணிக்கு புறப்பட்டுச் சென்று காலை 10.30 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பை சென்றடையும்.

தொலைந்து போன தங்கச் சங்கிலி 3 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை!

நாமக்கல், பிப்.18- பள்ளிபாளையம் அருகே தவறவிட்ட 3 பவுன் தங்கச் சங் கிலியை, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் மூன்றே மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்த காவல்துறையினருக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த ஒட்ட மெத்தை பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா. கூலித் தொழிலா ளியான இவர், தனது குடும்பத் தேவைக்காக 3 பவுன் தங்கச் சங்கிலியை தனியார் வங்கி ஒன்றில் அடகு வைத்திருந்தார். இந்நிலையில், செவ்வாயன்று வங்கியில் பணத்தைச் செலுத்தி நகையை மீட்ட மல்லிகா, அதனைத் தனது பையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றுள் ளார். அவர் கொண்டு சென்ற பை எதிர்பாராதவிதமாக கிழிந்தி ருந்த நிலையில், அதனை கவனிக்காமல் சென்றதால் வழியி லேயே தங்கச் சங்கிலி கீழே விழுந்துள்ளது. வீட்டிற்குச் சென்ற பிறகு பையைப் பார்த்த மல்லிகா, நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் உடனடியாக பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் கௌதம் தலைமையிலான போலீசார், மல்லிகா நடந்து வந்த பாதையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது, சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை அவ்வழியாகச் சென்ற இளைஞர் ஒருவர் எடுத்துச் செல்வது சிசிடிவி காட்சியில் பதி வாகியிருந்தது. அதன் அடிப்படையில் அந்த இளைஞரை அடையாளம் கண்ட போலீசார், அவரிடமிருந்து தங்கச் சங் கிலியை பத்திரமாக மீட்டனர். புகார் அளித்த மூன்றே மணி நேரத்திற்குள் நகையை மீட்ட போலீசார், மல்லிகாவை நேரில் வரவழைத்து நகையை ஒப்படைத்தனர்.

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், பிப்.18- ஒப்பந்த ஊழியர்க ளுக்கு தினக்கூலி ரூ.766ஐ வாரியமே நேரடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஊதிய உயர்வு உடனடி யாக வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலி ரூ.766ஐ வாரி யமே நேரடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, சேலம் மின் திட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. தலை வர் கோ.குமார் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், செயலாளர் வீ. ரகு பதி, பொருளாளர் ர.கந்த சாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 5 பேர் கைது

உதகை, பிப்.18- உதகையில் மூடப்பட்டுள்ள இந்துஸ் தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து திருட் டுத்தனமாக மண் மற்றும் கற்களை உடைத்த 5 பேரை காவல் துறையினர் கைது செய்த னர். நீலகிரி மாவட்டம், உதகை எச்பிஎப் பகுதி யில் ஒன்றிய அரசின் சினிமா படச்சுருள், உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்து வந்த இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை நழிவடைந்ததை தொடர்ந்து தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. சமீப கால மாக இந்த தொழிற்சாலை பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் திருட்டுத்தனமாக அத்துமீறி சிலர் நுழைந்து மண் மற்றும் கற்களை உடைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை காப்புக்காடு வனப்ப குதியில் அத்துமீறி சிலர் நுழைந்ததாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் புதுமந்து காவல் துறையினர் ரோந்துப் பணி யில் ஈடுபட்டிருந்த போது, உதகை தலைக் குந்தா பகுதியை சேர்ந்த ராஜன், சுபாஷ், குமார், சந்தோஷ், மோகன்ராஜ் ஆகிய 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்ட தில், அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட னர். இதைத்தொடர்ந்து காப்புக்காட்டிற்குள் அத்துமீறி நுழைந்து திருட்டுதனமாக மண் மற் றும் கற்களை உடைத்த குற்றத்திற்காக புது மந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, 5 பேரையும் உதகை கிளைச் சிறை யில் அடைத்தனர்.