முந்தய பக்கம்

ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதியது

28 Nov 2025, 2:28 pm
ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதியது
<p><strong>ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதியது</strong></p> <p>சிதம்பரம், நவ 28- சிதம்பரம் அருகே ஐயப்ப பக்தர்க ளுடன் வந்த பேருந்து விபத்தில் சிக்கிய தில் 18 பேர் காயங்களுடன் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா கண்ணனூர் கிராமத்திலிருந்து கேரளா மாநிலத்தில் உள்ள சபரி மலைக்கு &nbsp;1 பெண் உள்பட 40 ஐயப்ப பக்தர்கள் புறப்பட்டுச்சென்ற னர். இவர்கள் பயணம் செய்த பேருந்து வெள்ளிக்கிழமை காலை சிதம்பரம் அருகே சி. சி. முட்லூர் கிராமத்தில் &nbsp;விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் &nbsp;ஓட்டுநர் &nbsp;கட்டுப்பாட்டை இழந்து வெள்ளாறு பாலத்தின் இடதுபுறத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதி நின்றது &nbsp;இதில் பயணம் செய்த 18 பேர் லேசான காயங்களுடன் சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வெள்ளாறு பக்க வாட்டு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய வாறு நின்றது, பேருந்து &nbsp;ஆற்றில் விழுந்து இருந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். &nbsp; தீயணைப்பு துறையினர் பாலத்தின் மீது அந்தரத்தில் நின்ற பேருந்தை கிரேன் மூலம் வாகனத்தை அகற்றினர். ஓட்டுநர் பேருந்தை தூக்க கலக்கத்தில் பாலத்தின் கட்டை மீது மோதி உள்ளாரா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram