முந்தய பக்கம்

பேருந்து பழுதாகி நின்றதால் நெரிசல்

31 Mar 2026, 4:50 pm
பேருந்து பழுதாகி நின்றதால் நெரிசல்
<p><strong>பேருந்து பழுதாகி நின்றதால் நெரிசல்</strong></p> <p>தருமபுரி, மார்ச் 31- குமாரசாமிபேட்டை ரயில்வே மேம்பாலத்தில் அரசு நகரப் பேருந்து பழுதாகி நின்றதால், போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. தருமபுரி புதிய பேருந்து நிலையம் கடந்த பிப்.5 &nbsp;ஆம் தேதியன்று பயன்பாட்டிற்கு வந்தது. அங்கிருந்து &nbsp;கிருஷ்ணகிரி, சேலம், பென்னாகரம், பாலக்கோடு, பெங்களூரு, ஒசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தருமபுரி &nbsp;பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரூர், &nbsp;ஊத்தங்கரை, பாப்பிரெட்டிப்பட்டி, திருவண்ணா மலை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் வசதிக்காக புதிய &nbsp;மற்றும் பழைய பேருந்து நிலையங்களுக்கு இடையே &nbsp;அரசு நகரப் பேருந்துகள் மற்றும் தனியார் சிற்றுந்து கள் இயக்கப்படுகின்றன. &nbsp;இந்நிலையில், திங்களன்று இரவு புதிய பேருந்து &nbsp;நிலையத்திலிருந்து, பழைய பேருந்து நிலையத்துக்கு &nbsp;இயக்கப்பட்ட அரசு நகரப் பேருந்து ஒன்று, குமாரசாமி பேட்டை ரயில்வே பாலத்தின் மேல் சென்று கொண்டி ருந்தது. அப்போது, பேருந்து திடீரென பழுதாகி நின்ற தால், பயணிகள் உடனடியாக இறக்கி விடப்பட்ட னர். பேருந்தை நகர்த்த முடியாததால், பாலத்தின் மேல் &nbsp;நடுவழியில் வைத்தே பழுதை சரி செய்தனர். ஏற் கெனவே இவ்வழியில் போக்குவரத்து நெருக்கடி உள்ள நிலையில், இதன் காரணமாக கடும் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டி களும், பயணிகளும் அவதிக்குள்ளாகினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram