தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

16 Nov 2025, 3:30 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

பேருந்து விபத்து: 15 பேர் காயம்

அவிநாசி, நவ.16- பெங்களூரில் இருந்து சபரிமலைக்கு சென்ற சொகுசு பேருந்து ஞாயிறன்று அவிநாசி அடுத்து நியூ  திருப்பூர் அருகே முன்னாள் சென்ற லாரியின் மீது  மோதி விபத்துக்குள்ளானது. இதில், 15 மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சபரிமலை கோவிலுக்கு செல்வதற்காக 60 பேர் கொண்ட குழுவி னர் சொகுசு பேருந்தில் வந்துள்ளனர். இந்த பேருந்து கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலை நியூ திருப்பூர் பகுதியில் அதிகாலை வந்து கொண்டிருந்தபோது, கோவைக்கு சென்று கொண்டிருந்த லாரியின் பின் பகு தியில் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில்,  பேருந்து ஓட்டுநர் உட்பட 15 க்கும் மேற்பட்டோர் காயம்  அடைந்துள்ளனர். இதுகுறித்து பெருமாநல்லூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரூ.28 லட்சம் மதிப்பிலான  விதைகளை விற்க தடை

சேலம், நவ.16- சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ரூ.27.83 லட்சம் மதிப்பிலான விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விதை ஆய்வு துணை இயக்குநர் க.சித்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விவசாயிக ளுக்கு தரமான விதைகள், நியாயமான விலையில் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் தமிழகம் முழுவ தும் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற் கொள்ளப்படுகிறது. தருமபுரி மாவட்ட விதை ஆய்வு  துணை இயக்குநர் மணி தலைமையிலான குழுவினரால் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள விதை விற் பனை நிலையங்களில் ஆய்வு நடத்தப்பட்டன. இதில் விற்பனைக்கு இருப்பு வைக்கப்பட்ட விதை குவியல் களின் தரத்தை அறிய கொள்முதல் ஆவணங்கள், பதி வேடுகள், தனியார் விதைகளுக்கான பதிவுச் சான்று கள், விதைப்பகுப்பாய்வு முடிவு அறிக்கைகள், இருப்பு பதிவேடு மற்றும் விற்பனை ரசீது ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. வேளாண் விற்பனை மையங்கள், தனியார் விதை சுத்திகரிப்பு நிலையம், விதைப் பண்ணை கள், விதை விற்பனை நிலையங்கள் என மொத்தம் 46 விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு,  43 இடங்களில் விதை மாதிரிகள் ஆய்வுக்காக எடுக்கப் பட்டன. இதில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்ட ரூ.27.83 லட்சம் மதிப்பிலான 3.981 மெட்ரிக் டன் விதை களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கலப்பட நெய் குடோனுக்கு சீல்

அவிநாசி, நவ.16- அவிநாசி அருகே  ஆலங்கட்டிபாளையம்  பகுதி யில் ‘நந்தினி’  என்ற  நெய்யில் டால்டா மற்றும் பாமா யில் போன்ற பொருட்களைக் கலந்து நாடு முழுவதும்  விற்பனை செய்து வந்த கே.எம்.எப். வினியோகஸ்தர் உட்பட 4 பேர் சனியன்று கைது செய்யப்பட்டனர். கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்ட மைப்பால் (கே.எம்.எப்) தயாரிக்கப்படும் ‘நந்தினி’ நெய் யில் கலப்படம் நடப்பதாக பெங்களூரு காவல்துறையி னருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கே.எம்.எப். வினியோகஸ்தர் மகேந்திரா என்பவர் அவி நாசி ஒன்றியம்  வடுகபாளையம்  ஊராட்சி ஆலங்கட்டி பாளையத்தில் நடத்தி வந்த ஆலையை சேவூர் காவல் துறையினரின் உதவியுடன் பெங்களூரு காவல்துறை யினர் சோதனை மேற்கொண்டனர். இதில், கே.எம்.எப்.பில் இருந்து வாங்கும் அசல் நெய்யுடன், டால்டா,  பாமாயில், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை குறிப் பிட்ட விகிதத்தில் கலந்து, அசல் ‘நந்தினி’ பாக்கெட்டுக ளில் நிரப்பி, கலப்பட நெய்யை பெங்களூருவில் உள்ள  கடைகளுக்கு நந்தினி என்ற பெயரில் அதிக விலைக்கு விற்று வந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இதன் மூலம் பல கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதும், விசாரணையில் கண்டறியப்பட் டுள்ளது. இதையடுத்து கலப்பட நெய் தயாரித்த விநி யோகஸ்தர் மகேந்திரா, அவரது மகன் தீபக், விற்பனை யாளர் முனிராஜ், வேன் ஓட்டுநர் அபி அர்ஸ் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.