தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எரியும் வயிறுகளும்... எரிய மறுக்கும் சுடுகாடுகளும்

15 Mar 2026, 4:11 pm
எரியும் வயிறுகளும்... எரிய மறுக்கும் சுடுகாடுகளும்
<p><strong>எரியும் வயிறுகளும்... எரிய மறுக்கும் சுடுகாடுகளும்</strong></p> <p>ஈரான் மீதான அமெரிக்கா, இஸ் ரேல் நடத்தும் தாக்குதல்கள் காரணமாக மூண்டுள்ள போர் மேகங்கள், எங்கோ பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் தமிழகத்தில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களின் சமை யல் கூடங்களையும், மயானக் கரைகளையும் இன்று கண் ணீரில் நனைத்துக் கொண்டிருக் கின்றன. எரிவாயு சிலிண்டர் &nbsp;விலையேற்றம் மற்றும் தட்டுப் பாட்டால், வாழ்வாதாரத்திற்கும் வழி இன்றி, வாழ்வு முடிந்த பின் &nbsp;நிம்மதியாக செல்லவும் வழி இன்றி ஒரு தர்மசங்கடமான சூழ லில் தவிக்கிறது மேற்கு மாவட்டங் கள். திருமண வைபவங்கள் களை கட்டும் இந்த முகூர்த்தக் காலத் தில், மங்கல இசைக்கு நடுவே சமையல் கலைஞர்களின் நெஞ் சில் பயப்பந்து உருண்டோடுகி றது. மார்ச் 11-ஆம் தேதி நிலவரப் படி, ரூ.1,900-க்கு விற்கப்பட்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர், இன்று அசுர வேகத்தில் உயர்ந்து ரூ.3,500 முதல் ரூ.3,800 வரை விற் பனை செய்யப்படுகிறது. வார &nbsp;இடைவெளியில் ஒரு சிலிண்ட ருக்கு ரூ.1,200 வரை உயர்ந்துள் ளது எரியும் நெருப்பில் எண் ணெயை ஊற்றியது போல் உள் ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பே ஒரு இலைக்கு இவ்வளவு &nbsp;என்று பேசி முன்பணம் வாங்கி விட்டோம். இப்போது சிலிண்டர் &nbsp;விலை இருமடங்கு ஆகிவிட்டது. கேட்டரிங் உரிமையாளர்களாகிய நாங்கள் யாரிடம் போய் அழுவது? வாடிக்கையாளர்களிடம் கூடுதல் பணம் கேட்டால் அவர்கள் முகத்தை சுளிக்கிறார்கள். கேட்கா மல் போனால் எங்களுக்குப் பெரும் நஷ்டம், என வேதனை யோடு பகிர்கிறார்கள் கோவை மாவட்ட சமையல் கலைஞர்கள். தட்டுப்பாடு ஒருபுறம், விலை யேற்றம் மறுபுறம் என இரட்டைத் &nbsp;தாக்குதலால் வேறு வழியின்றி மீண்டும் விறகு அடுப்புகளுக்கும், மின்சார அடுப்புகளுக்கும் மாற வேண்டிய கட்டாயத்திற்கு அவர் கள் தள்ளப்பட்டுள்ளனர். வரும் மார்ச் 20-க்குப் பிறகு வரும் முகூர்த்தங்களை எப்படிச் சமா ளிக்கப் போகிறோம் என்ற அச்சம் அவர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இறுதிப் பயணத்திலும் சோதனை! சமையல் கூடங்கள் மட்டு மன்றி, மனிதனின் இறுதிப் பயண மும் இன்று இக்கட்டான நிலையில் &nbsp;உள்ளது. கோவை மாநகராட்சி யில் உள்ள 11 மின் மயானங்களில் &nbsp;நாளொன்றுக்கு சராசரியாக 32 &nbsp;சடலங்கள் தகனம் செய்யப்படு கின்றன. ஒரு உடலை எரியூட்ட &nbsp;ஒரு முழு சிலிண்டர் தேவைப்படும் நிலையில், தற்போது கைவசம் உள்ள சிலிண்டர்கள் இன்னும் மூன்று நாட்களுக்கு மட்டுமே வரும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. வர்த்தக சிலிண்டர் விநியோ கம் சீர்குலைந்துள்ளதால், எரி வாயு தகன மேடைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இத னால், அன்புக்குரியவர்களை இழந்த துக்கத்தில் இருக்கும் பொதுமக்களுக்கு மேலும் சிரமம் ஏற்படக்கூடாது என்பதற்காக, மாநகராட்சி நிர்வாகம் மின்சார மயானங்களை முழுவீச்சில் பயன் படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஒரு வேளை நிலைமை இன்னும் மோச மானால், மீண்டும் விறகு அடுக்கு களைக் கொண்டே சடலங்களை எரியூட்ட வேண்டிய நிலைக்கு நிர் வாகம் தள்ளப்பட்டுள்ளது. உணவு சமைக்கும் அடுப்பு களும், உடல் எரியும் இடங்களும் ஒரே நேரத்தில் முடங்குவது ஒரு &nbsp;சமூகத்தின் மிகப்பெரிய நெருக் கடி. ஒன்றிய மற்றும் மாநில அரசு கள் உடனடியாக தலையிட்டு, சிலிண்டர் விநியோகத்தை சீர் செய்ய வேண்டும் என்பதே ஒட்டு மொத்த மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. போர் மேகங்கள் விலகுமோ இல்லையோ, சாதா ரண மக்களின் அடுப்புகளில் எரி யும் நெருப்பு அணையாமல் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். - கவி</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.