முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

15 Oct 2026, 9:20 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

புர்கினோ பாசோ : பாடத்திட்டம் மாற்றம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோ தனது பள்ளிப் பாடத்திட்டங்களான வரலாறு, புவியியல், குடி

மையியல் ஆகியவற்றில் பெரும் மாற்றங்களைச் செய்யத் தொடங்கியுள்ளது.

காலனித்துவ காலப் பார்வைகளை அகற்றிவிட்டு, ஆப்பிரிக்க வரலாறு, ஆப்பிரிக்கர்களின் எதிர்ப்புப் போராட்டங்கள், கலாச்சார மதிப்புகள் மற்றும் உள்ளூர்அறிவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து கல்வி முறையை “மறுசீரமைப்பதே” இதன் நோக்கம் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பழைய பாடத்திட்டங்கள்ஐரோப்பியர்களைப் பெருமைப்படுத்தியும், ஆப்பிரிக்க மக்களைத் தாழ்வாகவும் சித்தரித்தன. இந்நிலையில் பரந்த அரசியல்இலக்கின் ஒரு பகுதியாக இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது எனக் கூறப்படுகிறது.

உக்ரைனுக்கான ஸ்டார்லிங்க் சேவையை குறைத்த எலான் மாஸ்க்

ரஷ்யா மீதான தாக்குதலுக்கு உதவும் வகையில் உக்ரைன் ராணுவத்திற்கு வழங்கப்பட்டு வந்த ‘ஸ்டார்லிங்க்’ மற்றும்‘ஸ்டார்ஷீல்ட்’ செயற்கைக்கோள் தொடர்புச் சேவையை எலான் மாஸ்க் குறைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இணைய சேவை குறைக்கப்பட்ட காரணத்தால் ரஷ்யா மீதான தாக்குதல்கள் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள்பலவீனமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. டொனால்டு டிரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இடையே மறைமுகமோதல் உள்ள நிலையில் இந்த நடவடிக்கை அரங்கேறியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram