முந்தய பக்கம்

ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்

31 Jan 2026, 5:27 pm
ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்
<p><strong>ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்</strong></p> <p>நாமக்கல், ஜன.31- குமாரபாளையம் ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த &nbsp;காளைகளை வீரர்கள் அடக்கி அசத்தினர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சேலம் பைபாஸ் &nbsp;சாலையில், தனியார் கல்லூரியின் பின்புறம் குமாரபாளையம் &nbsp;ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி சனி யன்று நடைபெற்றது. &nbsp;500-க்கும் மேற்பட்ட மாடுகள் 300-க்கும் &nbsp;மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் உள்ளிட்டோர் இந்த போட்டியில் &nbsp;பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் வினோத் குமார் வரவேற்றார். தமிழ்நாடு ஜல்லிகட்டு பேரவை தலைவர் &nbsp;ராஜசேகர் தலைமை வகித்தார். திமுக மாநில அமைப்பு செய லர் பாரதி, ஈரோடு எம்.பி. பிரகாஷ், ஆதி திராவிடர் நலத்துறை &nbsp;அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து போட்டியை &nbsp;துவக்கி வைத்தனர். முன்னதாக ஆர்.டி.ஓ. லெனின் உறுதி மொழி வாசிக்க, மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சீறி வந்த காளைகளை, வீரர்கள் அடக்கி அசத்தினர். மாடு களும் வீரர்கள் கையில் சிக்காமல் சீறி பாய்ந்தது. இதனை &nbsp;காண பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இந்நிகழ்வில் &nbsp;கலந்து கொண்டனர். காலை 9 மணிக்கு துவங்கிய ஜல்லிக் கட்டு போட்டி மாலை 4 மணி அளவில் நிறைவு பெற்றது. மேலும் &nbsp;ஜல்லிக்கட்டு போட்டியில் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க் கப்பட்ட நிலையில், காயமடைந்த ஒரு சில வீரர்களுக்கு உட னடி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியில் &nbsp;வெற்றி பெற்ற மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசு &nbsp;பொருட்கள் வழங்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram