பாலூர் மஞ்சுவிரட்டு விழாவில் சிறீப்பாய்ந்த காளைகள்
18 Jan 2026, 4:50 pm
<p><strong>பாலூர் மஞ்சுவிரட்டு விழாவில் சிறீப்பாய்ந்த காளைகள்</strong></p>
<p> திருவண்ணாமலை,ஜன.18- திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட பாலூர் கிராமத்தில் மஞ்சுவிரட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியியை முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார். இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் பாலூர் மற்றும் கீழ்ப்பாலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காளை மாடுகள் பங்கேற்றது. இளைஞர்கள் உற்சாகத்துடன் மஞ்சுவிரட்டு போட்டியில் பங்கேற்று உற்சாகமடைந்தனர்.</p>
