முந்தய பக்கம்

மாட்டுவண்டி எல்கை பந்தயம்

21 Dec 2025, 3:21 pm
மாட்டுவண்டி எல்கை பந்தயம்
<p><strong>மாட்டுவண்டி எல்கை பந்தயம்</strong></p> <p>அறந்தாங்கி, டிக.21- &nbsp;துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, மருதங்குடி கிராமத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் பங்கேற்ற மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. &nbsp; இந்தப் போட்டி பெரிய மாடு, நடுமாடு. சின்ன மாடு என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாட்டு வண்டி பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு, தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் சுழற் கோப்பைகள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கினார். &nbsp;பந்தயத்தை சாலையில் இரு புறமும் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram