முந்தய பக்கம்

வேலூர் கம்மவான் பேட்டையில் காளை விடும் திருவிழா

24 Jan 2026, 3:38 pm
வேலூர் கம்மவான் பேட்டையில் காளை விடும் திருவிழா
<p><strong>வேலூர் கம்மவான் பேட்டையில் காளை விடும் திருவிழா</strong></p> <p>வேலூர், ஜன. 24 - வேலூர் வட்டம், &nbsp;ராணுவ பேட்டை என்னும் கம்மவான் பேட்டையில் 58 ஆம் ஆண்டு மாபெரும் காளை விடும் திருவிழா சனிக்கிழமையன்று (ஜன.24) ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முருகன் தலைமையில் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஆந்திர மாநிலம் சித்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. தமிழக மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த பல்லா யிரக்கணக்கானோர் காளை விடும் திரு விழாவை காணக் குவிந்திருந்தனர். குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட இலக்கினை கடக்கும் காளைகளுக்கு முதல் பரிசாக ரூ. 80,888ரூபாயும், இரண்டாம் பரிசாக 60,666 ரூபாயும், மூன்றாம் பரிசாக 45,045 ரூபாயும் என மொத்தம் 51 பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் கலந்து கொண்ட காளைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பிறகு அனுமதிக்கப்பட்டது. வேலூர் வட்டாட்சியர் வடிவேலு தலை மையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணி களை கவனிக்க தீயணைப்பு துறை வீரர்கள், &nbsp;மாடு முட்டினால் சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினரும் இருந்த னர். நிகழ்ச்சியில் எருது விடும் விழா குழு வினர் ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி ஏழுமலை, துணைத் தலைவர் லோகலட்சுமி குமரன், ஊர் பெரியதனம் விஸ்வநாத கவுண்டர், தவமணி கவுண்டர், பிரதீப் கருணா மூர்த்தி உட்பட ஊர் பொதுமக்கள் வாழும் நண்பர்கள் இளைஞர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்</p>
Share
FacebookXWhatsAppTelegram