முந்தய பக்கம்

ரூ.318 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள

17 Feb 2026, 3:36 pm
ரூ.318 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள
<p><strong>ரூ.318 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள</strong></p> <p>சென்னை, பிப். 17 &ndash; சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள நரம்பியல் கட்டிடம் உள்ளிட்ட கட்டி டங்களை செவ்வாயன்று (பிப்.17) தலை மைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 100 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்ட ஓசூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 65 கோடி ரூபாய் &nbsp;செலவில் கட்டப்பட்டுள்ள நரம்பியல் பிரிவுக் கட்டிடம், தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 64 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடங்கள், சென்னை, கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் 40 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒப்புயர்வு மையக் கட்டிடம், ராயபுரம் அரசு ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனையில் 32 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அவசரகால மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையத்திற்கான கூடுதல் கட்டடம் மற்றும் ரத்த வங்கி நவீன ரத்த கூறு பிரிப்பு அலகு உள்ளிட்ட கட்டிடங்களை முதல்வர் திறந்தார். இந்நிகழ்வில் போது அமைச்சர்கள் எ.வ வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram