முந்தய பக்கம்

பட்ஜெட் இன்று தாக்கல்!

31 Jan 2026, 3:56 pm
பட்ஜெட் இன்று தாக்கல்!
<p><strong>பட்ஜெட் இன்று தாக்கல்!</strong></p> <p>புதுதில்லி, ஜன.31- இந்திய நாடாளுமன்றத் தின் பட்ஜெட் கூட்டத்தொடர், &nbsp;குடியரசுத் தலைவர் உரை யுடன் ஜனவரி 28 அன்று துவங்கியது. ஜனவரி 29 அன்று 2026&ndash;27 &nbsp;நிதியாண்டிற்கான பொரு ளாதார ஆய்வறிக்கையை, நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து, பிப்ரவரி 1 அன்று 2026&ndash;27 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை சீதாராமன், &nbsp;தாக்கல் செய்கிறார். இது நிர் &nbsp;மலா சீதாராமனின் தொடர்ச்சியான 9-ஆவது பட்ஜெட் தாக்கல் ஆகும். கடந்த பட்ஜெட்டின் போது, தேர்தலை மனத் &nbsp;தில் வைத்து, பீகாருக்கு சலு கைகள் வாரியிறைக்கப்பட் டன. அதுபோல, இம்முறை மேற்கு வங்கம் மற்றும் அசா மிற்கு, பட்ஜெட்டில் பிரம் &nbsp;மாண்டமான நிதித் தொகுப்பு &nbsp;அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த பட்ஜெட்டின் போது, தமிழ்நாடு என்ற பெயரையே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உச்ச ரிக்கவில்லை. தமிழகத்திற் கான எந்த புதிய திட்டங்க ளையும் அவர் அறிவிக்க வில்லை. தற்போது தேர்தல் வருவதால், வாக்குகளை மனத்தில் வைத்தாவது, புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக, விடுமுறை நாட்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை என் றாலும், இம்முறை பிப்ரவரி 1 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதன் காரணமாக அன்று பங்குச் சந்தைகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram