‘பக்கிங்ஹாம் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் கோவளம்-நெம்மேலி சதுப்புநிலப்பகுதிக்கு அச்சுறுத்தல்
5 Nov 2026, 11:50 pm

‘பக்கிங்ஹாம் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் கோவளம்-நெம்மேலி சதுப்புநிலப்பகுதிக்கு அச்சுறுத்தல்

சென்னை,நவ.5-பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே ஏற்பட்டுள்ள மூன்று அடைப்புகள், கோவளம்-நெம்மேலி கடலோரச்சதுப்புநிலப்பகுதியில் அலைநீர் பரிமாற்றத்தைப் பாதித்துள்ளதாக ‘சதுப்புநிலப் பாதுகாப்பு வலையமைப்பு’ நடத்திய களஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லன் நீர்த்தேக்கக் கட்டுமானப் பணிகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இந்த அடைப்புகள், வடகிழக்குப் பருவமழையின் போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளன.செப்டம்பர் 3 மற்றும் அக்டோபர்16 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆய்வுத் தேதிகளிலுமே இந்த மூன்று அடைப்புகளும் இருந்ததாகவும், அக்டோபர் 23அன்றும் இந்தத் தடைகள் நீடித்ததாகவும் சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது.

முதல் அடைப்பு, திருவிடந்தைக்கும் வடநெம்மேலிக்கும் இடையே அமைந்துள்ளது. இது 2026 மார்ச் மாதம் முதல் இருப்பதாகக் கூறப்படுகிறது.செப்டம்பர் 3ம் தேதிக்குள் முட்டுக்காடு-கோவளம் முகத்துவாரத்திலிருந்து வந்த நீர் கால்வாயை உடைத்துக் கொண்டுபாய்ந்தது. அக்டோபர் 16க்குள், அங்கிருந்த மண் கரைகள் மேலும் பலப்படுத்தப்பட்டதாகத் தோன்றி

யது. இரண்டாவது அடைப்பு, நெம்மேலி-திருப்போரூர் பாலத்திற்கு அருகே கால்வாயை முழுமையாகத் துண்டித்துள்ளது. அங்கு மண் தடைகளும் பிற அமைப்புகளும் கால்வாயின் குறுக்கே எழுப்பப்பட்டுள்ளன. சாலவன்குப்பத்தில், ஒரு மண் தடை கால்வாயின் தெற்குப் பகுதியை முடக்கியுள்ளதாக அந்த அறிக்கைகுறிப்பிடுகிறது.

இந்த அடைப்புகள் மழைநீர் கடலில் கலப்பதைத் தடுத்து, பழையமகாபலிபுரம் சாலை தாழ்வான பகுதிகள் உட்படப் பல இடங்களில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தக்கூடும் என்றுஅந்த வலையமைப்பு எச்சரித்துள்ளது. மேலும், கடலோரச் சீற்றங்களுக்கு எதிராகச் சதுப்புநிலம் அளிக்கும் இயற்கை அரண் போன்றபாதுகாப்பையும் இது பலவீனப்படுத்தக்கூடும். இதுதவிர, 16 மீன்பிடி கிராமங்கள் இந்த அலைநீர் பரிமாற்றத்தையே நம்பியுள்ளன.

இருப்பினும், இவை அனைத்தும் தங்களது கணிப்புகள் மட்டுமே என்றும், களஆய்வு செய்யப்பட்ட இரண்டு தேதிகளிலுமே நீரின்அளவோ அல்லது நீர் ஓட்டமோ கருவிகள் கொண்டு அளவிடப்படவில்லை என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.மேலும், மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தின் வடிவமைப்பை உயர்நிலைக் குழு ஆய்வு செய்து முடிக்கும்வரை திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்தபோதிலும், செப்டம்பர் 3 அன்று பட்டிப்புலம் மற்றும் சாலவன்குப்பம்அருகே அதன்கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றதை ஆவணப்படுத்தியுள்ளதாக அ;ej அமைப்பு தெரிவித்துள்ளது. அன்றைய தினம்அங்கே மண் அள்ளும் இயந்திரங்கள் கரைகளை அமைக்கும் பணிகளிலும், சுற்றிலும் வடிகால்களைக் கட்டும் பணிகளிலும் ஈடுபட்டிருந்தன.

பருவக்காலச் சதுப்புநிலத்தின் குறுக்கே அமைக்கப்பட்ட தற்காலிக மணல் சாலையானது, மணமதி ஏரிக்குழுமத்துடன்சதுப்புநிலத்தை இணைக்கும் பல இயற்கை நீர்வரத்து வழிகளையும் தடுத்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.எனவே, நீர்வளத்துறை உடனடியாகக் கால்வாய் அடைப்புகளை அகற்றி, இயற்கையான நீர் ஓட்டத்தைச் சீரமைக்க வேண்டும் என்று சதுப்புநிலப் பாதுகாப்புவலையமைப்பு வலியுறுத்தியுள்ளது. மேலும், திட்டத்தின் முன்மொழிவு, வடிவமைப்புத் திட்டங்கள் அல்லது சுற்றுச்சூழல்தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் இடம்பெறாத இந்தப் பணிகளுக்கான அடிப்படை என்ன என்பதைத் துறை தெளிவுபடுத்தவேண்டும் என்றும், உயர்நிலைக் குழுவின் ஆய்வின் தற்போதைய நிலையை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளது.