தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அத்தக்கூலிகளாக்கப்படும் பிஎஸ்என்எல் தொழிலாளர்கள்

28 Dec 2025, 5:05 pm
அத்தக்கூலிகளாக்கப்படும் பிஎஸ்என்எல் தொழிலாளர்கள்
<p><strong>அத்தக்கூலிகளாக்கப்படும் பிஎஸ்என்எல் தொழிலாளர்கள்</strong></p> <p>இந்தியாவின் தகவல் தொடர் புத் துறையில் ஒரு காலத்தில் ஏகபோக உரிமையாளராகத் திகழ்ந்த பொதுத்துறை நிறுவனம் பிஎஸ்என்எல் (BSNL). 2000-ஆம் &nbsp;ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறு வனம், கம்பி வழி இணைப்புகள், எஸ்டிடி (STD) பூத்கள் என இந்தி யப் புரட்சியின் அடித்தளமாக விளங்கியது. இன்று 4ஜி மற்றும் எப்டிடிஎச் (FTTH) சேவைகளை வழங்கினாலும், தனியார் மயமாக் கல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுக ளால் இந்நிறுவனம் கடும் நெருக் கடியை சந்தித்து வருகிறது. 1990-களின் இறுதியில் தொடங் கிய தனியார் மயமாக்கல், கொரோனா காலத்திற்குப் பிறகு &nbsp;தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, விருப்ப ஓய்வுத் திட்டம் (VRS) என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் வெளியேற்றப்பட்ட னர். உதாரணமாக, ஈரோடு மாவட் டத்தில் முன்பு 1,000-க்கும் மேற் பட்டோர் பணியாற்றிய இடத்தில், இன்று நிரந்தர ஊழியர்கள் 139 ஆக வும், ஒப்பந்த ஊழியர்கள் 150 ஆக வும் சுருக்கப்பட்டுள்ளனர். 1,000 பேர் செய்ய வேண்டிய வேலை மிகச் சில ஊழியர்கள் மீது சுமத்தப் படுவது உழைப்புச் சுரண்டலின் &nbsp;உச்சமாகும். அதுவும் அத்தக்கூலி களாக மாற்றப்பட்டுள்ளனர். &nbsp;தற்போது பராமரிப்பு, நிர்வா கம், தூய்மைப் பணி என அனைத் தும் வெளிமுகமை &nbsp;மூலம் ஒப்பந்த தாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள் ளன. டெண்டர் விதிமுறைகளின் படி, ஒப்பந்தத் தொழிலாளர்க ளுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற் றும் போனஸ் வழங்கப்பட வேண் டும். ஒவ்வொரு மாதமும் 7-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டும். பிஎப் (PF) மற்றும் இஎஸ்ஐ (ESI) &nbsp;போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் முறையாகச் செயல்ப டுத்தப்பட வேண்டும். ஆனால், நடைமுறையில் இந்த &nbsp;விதிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. பல &nbsp;மாவட்டங்களில் தொழிலாளர் களுக்கு சட்டப்பூர்வமான ஊதி யமோ, பாதுகாப்புப் பலன் களோ கிடைப்பதில்லை. நிர்வா கத்தின் மெத்தனத்தால் தொழிலா ளர் நலத்துறை மற்றும் பிஎப் அமைப்புகளில் ஏராளமான வழக்கு கள் நிலுவையில் உள்ளன. சில இடங்களில் அபராதங்களும் விதிக் கப்பட்டுள்ளன. சேவை பாதிப்பும் தீர்வும் தனியார் நிறுவனங்களின் கடுமையான போட்டி நிலவும் &nbsp;சூழலில், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கத் &nbsp;தகுதியான மற்றும் போதுமான ஊழியர்கள் அவசியம். ஆனால், &nbsp;அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் நிலைக்குத் தொழிலா ளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். &lsquo;முதன்மை வேலையளிப்பவர்&rsquo; என்ற முறையில், பிஎஸ்என்எல் நிர் வாகம் தனது ஒப்பந்ததாரர்கள் தொழிலாளர் சட்டங்களை முறை யாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். அரசியல் போராட்டங்களால் கூட அசைக்க முடியாத அதிகார வர்க்கத்தின் போக்கால், இன்று பிஎஸ்என்எல்-இன் அடிப்படை கட்டுமானமே சிதைந்து வருகிறது. பொதுத்துறை நிறுவனத்தைப் பாதுகாக்கவும், உழைக்கும் வர்க் கத்தின் உரிமைகளை நிலைநாட்ட வும் நிர்வாகம் உடனடியாகத் தலை யிட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்க &nbsp;வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. - சக்திவேல், ஈரோடு</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.