மூன்றாவது ஊதிய மாற்றத்தை அமலாக்க பிஎஸ்என்எல் சங்கங்கள் கோரிக்கை
28 Oct 2026, 12:26 am

மூன்றாவது ஊதிய மாற்றத்தை அமலாக்க பிஎஸ்என்எல் சங்கங்கள் கோரிக்கை

திருப்பூர், அக்.27-பிஎஸ்என்எல் நிர்வாகம் மூன்றாவது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி கோவை மாவட்டபிஎஸ்என்எல் அனைத்து சங்கங்கள் சார்பாக செவ்வாயன்று திருப்பூர் மக்களவைஉறுப்பினர் கே.சுப்பராயனிடம் மனு கொடுக்கப்பட்டது.

பிஎஸ்என்எல் நிறுவனம் இழப்பை சந்தித்து வருவதால் பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு மூன்றாவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த முடியாது என்று நிர்வாகம் மறுத்து வருகிறது. ஆனால் பிஎஸ்என்எல் ஒரு சேவைத் துறை என்பதால் லாப, நஷ்டக்கணக்கை பார்த்து ஊதிய மாற்றத்தை அமல்படுத்தாமல் இருக்கக் கூடாது. இதற்கு ஒன்றிய அரசிடம்விதி விலக்கு பெற்று பிஎஸ்என்எல் ஊழியர்களுக்குமூன்றாவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும் என்று கோரி இந்த மனு அளிக்கப்பட்டது. இது குறித்து நாடாளுமன்ற கேள்விநேரத்தில் நிச்சயமாக பேசுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பின்போது பிஎஸ்என்எல் ஊழியர் ங்க மாநில துணைத்தலைவர் ஏ.பாபுராதாகிருஷ்ணன், முன்னாள் மாநில உதவிச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியன், என்எப்டிஇ பிஎஸ்என்எல் மாவட்டச்செயலாளர்கள் சௌ.மகேஸ்வரன், கே.பாலசுப்பிரமணியன், எஸ்என்இஏ நிர்வாகி குருசாமி மற்றும் கணேசன், ஜெயகிருஷ்ணன், அருண்குமார், பாபு, சங்கிலிதுரை, அண்ணாதுரை ஆகியோர் உடன் பங்கேற்றனர்.