தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிஎஸ்என்எல் பின்னடைவும், கார்ப்பரேட் அரசியலும்!

7 Feb 2026, 5:37 pm
பிஎஸ்என்எல் பின்னடைவும், கார்ப்பரேட் அரசியலும்!
<p><strong>பிஎஸ்என்எல் பின்னடைவும், கார்ப்பரேட் அரசியலும்!</strong></p> <p>தரைவழித் தொலைபேசி காலத்தி லிருந்து மாறி, இன்று &lsquo;செல்போன் இன்றி அமையாது உலகு&rsquo; என்ற &nbsp;நிலையை எட்டியுள்ளோம். தொடக்க காலத்தில் அழைப்புகளை மேற்கொள் பவர் மட்டுமின்றி, அழைப்பைப் பெறு பவரும் பணம் செலுத்த வேண்டிய கட் டாயம் இருந்தது. இந்த நிலையை மாற்றி, பெறுபவருக்கான கட்டணத்தை ரத்து செய்தது பொதுத்துறை நிறு வனமான பிஎஸ்என்எல். தொலைத்தொடர்பு துறை 2ஜி, 3ஜியிலிருந்து 4ஜி, 5ஜி என அசுர வேகத்தில் வளர்ந்துவிட்டது. தனியார் நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கி வரும் சூழலில், பிஎஸ்என்எல் நிறுவ னம் ஈரோடு போன்ற முக்கிய நக ரங்களிலேயே மிகத் தாமதமாகத்தான் 4ஜி சேவையைத் தொடங்கியுள்ளது. இதற்காகப் புதிய சிம் கார்டுகள் மற் றும் போன்களை மாற்றிய வாடிக்கை யாளர்களோ தற்போது கடுமையான சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். முக்கியமாக, குரல்வழி அழைப்பு கள் (Voice Calls) தெளிவாக இருப்ப தில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இது குறித்து வாடிக்கையாளர் சேவை &nbsp;மையத்தைத் தொடர்பு கொண்டால், &ldquo;பேசுவதற்கு 3ஜி நெட்வொர்க்கை யும், இணையத்திற்கு 4ஜி நெட்வொர்க் கையும் மாற்றிக் கொள்ளுங்கள்&rdquo; என்ற வினோதமான அறிவுரை வழங்கப்படு கிறது. ஒரே நேரத்தில் இருவேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்து வது என்பது நடைமுறைக்குச் சாத்திய மற்றது எனப் பயனர்கள் ஆதங்கப்படு கின்றனர். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த தட்டுத்தடுமாற்றத்திற்குப் பின்னால் ஒன்றிய அரசின் பாரபட்சமான கொள் கைகள் இருப்பதாகக் குற்றச்சாட்டு கள் எழுகின்றன. தனியார் நிறுவனங் கள் தங்களுக்குத் தேவையான நவீனத் தொழில்நுட்பக் கருவிகளையும் தள வாடங்களையும் வெளிநாடுகளில் இருந்து தடையின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அத்த கைய இறக்குமதிகளுக்கு தடை விதிக் கப்பட்டுள்ளதாகத் துறை சார்ந்த வல்லு நர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். &ldquo;சுதேசித் தொழில்நுட்பம்&rdquo; என்ற பெயரில் பிஎஸ்என்எல் நிறுவனத்தைக் கட்டிப்போட்டு, தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாக ஒன் றிய அரசு செயல்படுவதாகத் தெரிகி றது. ஒட்டுமொத்தத் தொலைத்தொ டர்பு துறையையும் தனியாருக்குத் தாரைவார்க்கும் முயற்சியின் ஒரு பகுதி யாகவே, சிறந்த சேவையை பிஎஸ் என்எல் வழங்கிவிடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகக் கருதப் படுகிறது. பொதுத்துறை நிறுவனம் சிதைக்கப்படுவது சாமானிய மக்க ளின் சேவையையும், நாட்டின் பாது காப்பையும் கேள்விக்குறியாக்கும் என் பதில் ஐயமில்லை. -சக்திவேல், ஈரோடு</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.