முந்தய பக்கம்

தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்து பிஎஸ்என்எல் கருத்தரங்கம்

8 Jan 2026, 2:44 pm
தொழிலாளர் விரோத சட்டங்களை  எதிர்த்து பிஎஸ்என்எல் கருத்தரங்கம்
<p><strong>தொழிலாளர் விரோத சட்டங்களை &nbsp;எதிர்த்து பிஎஸ்என்எல் கருத்தரங்கம்</strong></p> <p>கோவை, ஜன.8- ஒன்றிய அரசின் தொழி லாளர் விரோத சட்டங்களை &nbsp;எதிர்த்து பிஎஸ்என்எல் ஊழி யர், ஓய்வூதியர், ஒப்பந்த ஊழியர் சங்கங்களின் ஒருங் கிணைப்புக் குழு சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் கோவை தலைமை தொலை பேசி நிலையத்தில் நடை பெற்றது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், ஒப்பந்த ஊழியர் சங்கம் மற்றும் பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் ஒன்றிய அரசின் தொழி லாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற &nbsp;கோரி பிப்ரவரி 12 ஆம் தேதியன்று நடை பெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்திடும் வகையில் சிறப்பு கருத்தரங்கம் வியாழனன்று கோவை தலைமை தொலைபேசி நிலையத்தில் நடை பெற்றது. ஒருங்கிணைப்புக் குழு மாவட்டத் தலை வர் என்.பாபு தலைமையில் நடைபெற்ற கருத் தரங்கத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க &nbsp;மாநிலத் தலைவரும், மாவட்டச் செயலாளரு மான எஸ்.மகேஸ்வரன் முன்னிலை வகித் தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பாபு ராதாகிருஷ்ணன், ஒருங்கிணைப்புக் குழு மாவட்டச் செயலா ளர் ஏ.குடியரசு, தமிழ்நாடு தொலைதொடர்பு &nbsp;ஒப்பந்த ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எம்.சையது இத்ரிஸ் ஆகியோர் கருத்துறை யாற்றினர். நிறைவாக தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த ஊழிய சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ஒய். அப்துல் முத்தலிப் நன்றி &nbsp;கூறினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram