தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிஎஸ்என்எல்-ன் மகத்துவமும் அதைச் சிதைக்கும் சதிகளும்!

10 Nov 2026, 9:55 pm
பிஎஸ்என்எல்-ன் மகத்துவமும்  அதைச் சிதைக்கும் சதிகளும்!

பிஎஸ்என்எல்-ன் மகத்துவமும் அதைச் சிதைக்கும் சதிகளும்!

இந்தியாவின் மூலைமுடுக்குகளில் உள்ள எளிய மக்களுக்கும் கிராமங்களுக்கும் தகவல் தொடர்புச் சேவையைத் தடையின்றி வழங்கிவரும் நமது பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு நடுவிலும் தனது மகத்துவமான சமூகப் பணியைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறது. தி இந்து நாளிதழ் தகவல் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற அதிகாரப்பூர்வபுள்ளிவிவரங்களின்படி, நாட்டில் அதிவேக இணைய சேவை (4ஜி) இல்லாத கிராமங்களின் எண்ணிக்கை கடந்தநான்கு ஆண்டுகளில் 45,180-லிருந்து (2022) 11,372 ஆக, அதாவது சுமார் 75 சதவீதம் வரை அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த வரலாற்றுச் சாதனைக்கு பிஎஸ்என்எல் முன்னெடுத்துள்ள கிராமப்புற 4ஜி இணைப்புத்திட்டமே (BSNL’s saturation project) முதன்மைக் காரணமாகும். 24,680 கிராமங்களுக்குச் சேவை வழங்கும் ஆரம்பகட்டஇலக்கையும் தாண்டி பிஎஸ்என்எல் சாதனை படைத்துள்ளது.

ஒடிசாவில் 1,789 கிராமங்களும், அருணாச்சல பிரதேசத்தில் 1,518 கிராமங்களும், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாதியளவிற்கும் மேலான கிராமங்களும் 4ஜி சேவைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக, பழங்குடியின மக்கள் அடர்த்தியாக வாழும் கிராமப் பகுதிகள் மற்றும் எல்லைப்புறப் பகுதிகளில்தான் இந்த இணைய சேவை இல்லாத 40 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் பெருநிறுவனங்கள் லாபம் கொழிக்கும் நகர்ப்புறங்களை மட்டுமே குறிவைத்து இயங்கும் நிலையில், விளிம்புநிலை மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட கிராமப்புற மற்றும் பழங்குடிப் பகுதிகளுக்கும்சேவையை வழங்குவது பிஎஸ்என்எல் போன்றபொதுத்துறை நிறுவனங்களால் மட்டுமே சாத்தியம் என்பதை இந்தத் தரவுகள் பறைசாற்றுகின்றன.

ஆனால், இத்தகைய மாபெரும் சமூகப் பங்களிப்பை வழங்கி வரும் பிஎஸ்என்எல் நிறுவனம், கடந்த பல ஆண்டுகளாக ஒன்றிய ஆட்சியாளர்களால் திட்டமிட்டுச் சீரழிக்கப்பட்டு வரும் கொடூரம் எவரும் மறக்க முடியாதது. தனியார் கார்ப்பரேட்கொள்ளைக்காரர்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிப்பதற்காக, பிஎஸ்என்எல்லை வேண்டுமென்றே நட்டமடையச் செய்யும் சதி அரங்கேறியது. 4ஜி அலைக்கற்றை வழங்குவதுபல ஆண்டுகள் திட்டமிட்டுத் தாமதப்படுத்தப் பட்டு, உள்கட்டமைப்புகள் முடக்கப்பட்டன. கட்டாய விருப்ப ஓய்வுஎன்ற பெயரில் லட்சக்கணக்கான ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு, நிறுவனத்தின் செயல்பாட்டு வலிமைசீர்குலைக்கப்பட்டது.

மறுபுறம், தொலைத்தொடர்புச் சந்தையைத் தனது கைக்குள் வைத்திருக்கும் தனியார் பெருநிறுவனங்கள், கட்டணங்களை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தி, உழைக்கும் மக்களின்பணத்தைச் சுரண்டி வருகின்றன. இந்தச் சூழலில்,எளிய பாட்டாளிகளுக்கும் கிராமப்புற மக்களுக்கும் நியாயமான விலையில் சேவையளிக்கும் ஒரே அரணாக பிஎஸ்என்எல் மட்டுமே நிமிர்ந்து நிற்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குத் தேவையான நவீன தொழில்நுட்ப உதவிகளையும் நிதி ஒதுக்கீடுகளையும் மோடி அரசு தடையின்றிவழங்கி முழுமையாகப் பலப்படுத்தவேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.