தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மருத்துவப் படியை நிறுத்திய பிஎஸ்என்எல் நிர்வாகம் விருதுநகரில் ஓய்வூதியர்கள் போராட்டம்

7 Oct 2026, 8:53 pm
மருத்துவப் படியை நிறுத்திய பிஎஸ்என்எல் நிர்வாகம் விருதுநகரில் ஓய்வூதியர்கள் போராட்டம்
<p><strong>மருத்துவப் படியை நிறுத்திய பிஎஸ்என்எல் நிர்வாகம் விருதுநகரில் ஓய்வூதியர்கள் போராட்டம்</strong></p><p>விருதுநகர், அக்.7-பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மாதந் தோறும் மருத்துவப் படி ரூ.1000 வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிர்வாகம், எவ்வித அறிவிப்புமின்றி திடீரென அனைத்து ஊழியர்களுக்கும் மருத்துவப் படியை நிறுத்தியுள்ளது. எனவே, இதனைக் கண் டித்து அனைத்து ஓய்வூதியர் சங்கத்தினர் கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>விருதுநகரில் தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு ஏஐபிடிபிஏ மாவட்டச் செயலாளர் கே.புளுகாண்டி தலைமை வகித்தார். போஸ் டல் கிளப் மாவட்டச் செயலாளர் எல்.சண்முகநாதன் துவக்கி வைத்து பேசினார். ஏஐபிஎஸ்என்எல் பிடபுள்யூஏ மாவட்டச் செயலாளர் என்.சண்முகம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். ஏஐபிடிபிஏ மாநில உதவித் தலைவர் எஸ்.செல்வராஜ் கண்டன உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் எம்.பெருமாள்சாமி, முத்துச்சாமி, சிவஞானம், சண்முகக்கனி உட் பட பலர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.