முந்தய பக்கம்

நிறுத்தப்பட்ட மருத்துவப்படியை வழங்கக்கோரி பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

7 Oct 2026, 10:08 pm
நிறுத்தப்பட்ட மருத்துவப்படியை  வழங்கக்கோரி பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>நிறுத்தப்பட்ட மருத்துவப்படியை வழங்கக்கோரி பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருநெல்வேலி அக். 7-பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கு அக்டோபர் மாதம் முதல் நிறுத்தப்பட்ட மருத்துவப் படியை மீண்டும் வழங்க கோரி நெல்லை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு பிஎஸ்என்எல் அனைத்து பென்சனர் சங்கம் சார்பில் புதன்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. </p><p>வண்ணார்பேட்டை பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ​ நயினார், சுவாமி குருநாதன், மனோகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். பாஸ்கரன், கணபதி, முத்துசாமி, நடராஜன், டாக்டர் மாசானம் உள்ளிட்டோர் பேசினர். அருணாச்சலம் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் பலர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram