முந்தய பக்கம்

அகவிலைப்படி நிவாரணம் வழங்கக் கோரி பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் தர்ணா

21 May 2026, 1:29 am
அகவிலைப்படி நிவாரணம் வழங்கக் கோரி  பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் தர்ணா
<p><strong>அகவிலைப்படி நிவாரணம் வழங்கக் கோரி பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் தர்ணா</strong></p><p>புதுச்சேரி, மே 20- அகவிலைப்படி நிவாரணத்தை உடனடி யாக வழங்கக் கோரி, அனைத்திந்திய பிஎஸ்என் எல் ஓய்வூதியர்கள் சங்கங்களின் சார்பில் புதுச்சேரியில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. கடந்த 01.01.2026 முதல் வழங்க வேண்டிய அக விலைப்படி நிவாரணத்தை (டிஆர்) உடனடியாக வழங்க வேண்டும், மூன்று மாதத்திற்கு ஒரு முறை வழங்க வேண்டிய அகவிலைப்படி நிவார ணத்தைக் காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் அலுவலகம் எதிரில் நடை பெற்ற இந்த தர்ணா போராட்டத்திற்கு, அனைத்திந்திய பிஎஸ் என்எல் ஓய்வூதியர்கள் நலச்சங்கத்தின் மாவட்ட தலைவர் அசோகராஜன், அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலை வர் ராமகிருஷ்ணன் ஆகி யோர் கூட்டாகத் தலைமை தாங்கினர். இப்போரா ட்டத்தில் ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கி ணைப்பாளர் சிவக்குமார் உட்படத் திரளான பிஎஸ்என்எல் ஓய்வூ தியர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங் களை எழுப்பினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram