முந்தய பக்கம்

பிஎஸ்என்எல் ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்

15 May 2026, 10:58 pm
பிஎஸ்என்எல் ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
<p><strong>பிஎஸ்என்எல் ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்</strong></p><p>கரூர், மே 15- உரிமைக்காக போராடி வரும் தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை ஏவி கைது செய்வது, வேலை நீக்கம் செய்வதை கைவிட வேண்டும் என்றும், போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க கரூர் மாவட்ட குழு சார்பில் கரூர் பிஎஸ்என்எல் தொலைபேசி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஜி. ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் டி. மனோகரன் வரவேற்றுப் பேசினார். மாவட்ட துணைச் செயலாளர் ஜி. பாலசுப்பிரமணியன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கெ. சக்திவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்டப் பொருளாளர் பி. நாகராஜன் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram