முந்தய பக்கம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்

27 Sept 2026, 3:05 am
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்

வேலூர், செப். 26 –அகில இந்திய பிஎஸ்என்எல்-டிஓடி ஓய்வூதியர் சங்கத்தின் வேலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் வேலூர் சரோஜ் இல்லத்தில் மாவட்டத் தலைவர் சி.தங்கவேலு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தை மாநிலத் தலைவர் சி.ஞானசேகரன், செயலாளர் ஆர்.ராஜ சேகர், உதவி பொருளாளர் பி.சரவணன், மாவட்ட செயலாளர் பி.முருகன், பொரு ளாளர் பி.லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாநில செய லாளர் ஆர்.ராஜசேகர் பேசுகையில், பென்சன் வேலிடேசன் சட்டம் 2025-ஐ ரத்து செய்ய வேண்டும், எட்டாவது ஊதியக் குழுவின் பணி குறிப்பில் ஓய்வூதிய மாற்றத்தை இணைக்க வேண்டும், என்பிஎஸ் மற்றும் யுபிஎஸ் திட்டங்களைக் கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கு 2017 ஜன.1 முதல் ஓய்வூதியத்தை மாற்றியமைக்க வேண்டும், கம்யூடேஷன் பிடித்தத்தை 10 ஆண்டுகள் 8 மாதங்க ளாகக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவ.25அன்று தில்லியில் நடைபெறும் அகில இந்தியப் பேரணியில் வேலூர் மாவட்டத்திலிருந்து ஓய்வூதியர்கள் திரளாகப் பங்கேற்பது என முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram