தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிஎஸ்என்எல் ஓய்வூதியர் கிளை மூன்று கிளைகளாக பிரிப்பு

22 Sept 2026, 11:46 pm
பிஎஸ்என்எல் ஓய்வூதியர் கிளை மூன்று கிளைகளாக பிரிப்பு

பிஎஸ்என்எல் ஓய்வூதியர் கிளை மூன்று கிளைகளாக பிரிப்பு

திருப்பூர், செப்.22–பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் திருப்பூர் கிளை மாநாட்டில் ஸ்தாபன விரிவாக்கத்திற்காக மூன்று கிளைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய பிஎஸ்என்எல் தொலை தொடர்புத்துறை ஓய்வூதியர் சங்க திருப்பூர் கிளை ஐந்தாவது மாநாடு அண்மையில்திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையத்தில்கிளைத்தலைவர் ரத்தினம் தலைமையில் நடைபெற்றது. சங்க நிர்வாகிகள், கே.கந்தசாமி தேசியக் கொடியையும்,எம்.ஜெயலட்சுமி சங்க கொடியையும் ஏற்றி வைத்தனர். கோவை மாவட்டச் செயலாளர் ஏ.குடியரசு துவக்கி வைத்துப்பேசினார். இதில், அகில இந்திய துணைத் தலைவர் என்.குப்புசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.சம்பத் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாள நாட்டுமக்களுக்கு மாநாட்டில் ரூ.4ஆயிரம் நிதியினை மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள் வழங்கினர். 80 வயது நிறைவடைந்த 15 பேரில், மாநாட்டுக்கு வந்திருந்த 8 பேருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

முன்னதாக, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, திருப்பூர் மகளிர் என தற்போதைய திருப்பூர் கிளை மூன்று கிளைகளாகஉருவாக்கப்பட்டது. திருப்பூர் வடக்கு கிளைக்கு எம்.அண்ணாதுரை தலைவராகவும், கே.விஸ்வநாதன் செயலாளராகவும், என்.குமரவேல் பொருளாளராகவும், திருப்பூர் தெற்கு கிளைக்கு எம்.பழனிவேல்சாமி தலைவராகவும்.பி.சௌந்தரபாண்டியன் செயலாளராகவும், வி.தண்டபாணி பொருளாளராகவும், திருப்பூர் மகளிர் கிளைக்கு எஸ்.உமா தலைவராகவும், ஆர்.லலிதா செயலாளராகவும், ஜெ.நிர்மலா ராணி பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், ஆர்.சீனிவாச ராகவன் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.