வடமாநிலத் தொழிலாளர் போராட்ட நிதி: பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தினர் வழங்கினர்
6 Jun 2026, 9:35 pm
<p><strong>வடமாநிலத் தொழிலாளர் போராட்ட நிதி: பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தினர் வழங்கினர்</strong></p><p>சென்னை, ஜூன் 6 - வட இந்தியாவில் போராடும் தொழிலா ளர்களுக்கு பிஎஸ்என்எல் டிஓடி பென்ச னர்ஸ் அசோசியேசன் சார்பில் போராட்ட நிதி வழங்கப்பட்டது. தில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளான நொய்டா, குர்காவன், மானேசர், பரிதாபாத், காஜியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட தொழிற்பேட்டைகளில் தொழி லாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்ற னர். காண்ட்ராக்ட் உள்ளிட்ட சமூக பாதுகாப் பற்ற தொழிலாளர்கள் சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி இந்தப் போராட்டத்தை நடத்தி வரு கின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு ஆதரவு வழங்க சிஐடியு அகில இந்திய தலைமை அறைகூவல் விடுத்தது. இதனையேற்று தொழிலாளர்களிடம் ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பிஎஸ்என்எல் டிஓடி பென்சனர்ஸ் அசோசியேசன் சார்பில் வசூலிக்கப்பட்டது. இந்தத் தொகையை சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணனிடம், அசோசியேசனின் பொதுச் செயலாளர் ஆர்.ராஜசேகர், மாநில அமைப்புச் செயலாளர் ஏ.ஆரோக்கியநாதன், சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.சிரில்ராஜ், மாநில ஆலோ சகர் சி.கே. நரசிம்மன், ஆர்.சீனிவாசராக வன் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வின் போது சிஐடியு மாநிலப் பொருளாளர் எஸ்.ராஜேந்திரன், மாநிலச் செயலாளர் கே.சி. கோபிகுமார், துணைத் தலை வர் எம்.சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.</p>
