பிப்ரவரி 12 பொது வேலைநிறுத்தம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் பங்கேற்க அறைகூவல்
4 Feb 2026, 6:28 pm
<p><strong>பிப்ரவரி 12 பொது வேலைநிறுத்தம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் பங்கேற்க அறைகூவல்</strong></p>
<p>புதுச்சேரி, பிப். 4- பிஎஸ்என்எல் நிறு வனத்தின் பாதுகாப்பை வலியுறுத்தி, புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு அறையில் சிறப்பு கருத்தரங்கம் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு ஊழி யர் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் த ராம கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் பி. அபிமன்யு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று உரையாற்றினார். அவர் தனது உரையில், “ஒன்றிய பாஜக அரசின் தவறான கொள்கைகளால் பொதுத்துறை நிறுவ னங்கள் முற்றிலும் சீரழிக்கப் பட்டுள்ளன. அரசுக்கு நிதி உதவி அளித்து வந்த எண்ணற்ற பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக் களை, கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு ஆட்சி யாளர்கள் தாரை வார்த்து வருகின்றனர். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சொத்துக்களும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவது வேதனையானது. எனவே, மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலின்படி, வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தப் போ ராட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் பங்கேற்பது என முடிவு செய்யப் பட்டுள்ளது. புதுச்சேரியி லும் இப்போரா ட்டத்தை வெற்றிகரமாக நடத்த ஊழியர்கள் ஒத்துழைக்க வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டார். முன்னதாக, ஊழி யர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் சுப்பி ரமணியன் அனைவரையும் வரவேற்றார். ஏஐபிடிபிஏ (அமைப்பின் மாநில அமைப்புச் செயலாளர் வி. ராமகிருஷ்ணன் ஓய்வூ திய மாற்றம் குறித்து விரி வாகப் பேசினார். இக்கரு த்தரங்கில் பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் திரளாகப் பங்கேற்றனர்.</p>
