முந்தய பக்கம்

பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பாக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

16 Jul 2026, 9:57 pm
பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம்  முன்பாக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பாக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருச்சிராப்பள்ளி, ஜூலை 16- பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஊதிய மாற்றம் வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல், இ.யு, ஏ.ஐ. பி.டி.பி. ஏ.டி.என்.டி.சி.டபிள்யூ.யூ. ஆகிய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் வியாழக்கிழமை அன்று பி.எஸ்.என்.எல் திருச்சி மண்டல பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் அஸ்லம் பாஷா தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி ஒருங்கி ணைப்புக் குழு கன்வீனர் செல்வராஜ், ஏ.ஐ.பி.டி.பி.ஏ. மாநிலப் பொருளாளர் இளங்கோவன், காரைக்குடி மாவட்டச் செயலாளர் ராமன், டி.என்.டி.சி.டபிள்யூ.யூ. மாநில செயற்குழு உறுப்பினர் குமார் ஆகியோர் பேசினர். இறுதியில், ஒருங்கிணைப்புக் குழு இணை கன்வீனர் முபாரக் அலி நன்றி கூறினார். இதில் ஏராளமானோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram