3 ஆவது ஊதிய மாற்றம் கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
17 Jul 2026, 10:27 pm
<p><strong>3 ஆவது ஊதிய மாற்றம் கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருநெல்வேலி ஜூலை 17- 3-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வூதிய மாற்றத்தை உடனே அமல்படுத்த வேண்டும் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்படுவதோடு இ.பி.எப் (EPF), இ.எஸ்.ஐ (ESI) முறைகளைச் சரி யாகச் செயல்படுத்த வேண்டும் என்று வலி யுறுத்தி பி.எஸ்.என்.எல்.இ.யு , ஏ.ஐ.பிடி.பி.ஏ மற்றும் டி.என்.டி.சி.டபிள்யூ.யு சார்பில் நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை வண்ணார்பேட்டை பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.பி.டி.பி.ஏ மாவட்டச் செயலாளர் எஸ். முத்து சாமி தலைமை தாங்கினார். பி.எஸ்.என்.எல். இ.யு மாவட்டத் தலைவர் இ. டேனியல் முத்து ராஜ், டி.என்.டி.சி.டபிள்யூ.யு மாவட்டச் செய லாளர் செ. ஜான் ஜெரில் ஆகியோர் பேசினர். ஏ.ஐ.பி.டி.பி.ஏ மாநில உதவித் தலைவர் நட ராஜா சிறப்புரையாற்றினார். மாநில அமைப்புச் செயலாளர் ஆண்டபெருமாள் ஆதரித்துப் பேசினார்.</p>
