நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவு பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
14 May 2026, 11:36 pm

நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவு பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மே 14 - நொய்டா உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் அடக்கு முறைக்கு இடையே போராடி வரும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பிஎஸ்என்எல் தொழிற்சங்கத்தினர் நாடு முழுவதும் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராடும் தொழிலாளர்களுக்கு நிதி வசூல் செய்து அனுப்ப ஏற் பாடு செய்துள்ளனர்.

திருப்பூர் பிஎஸ்என்எல் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப் பந்தத் தொழிலாளர் சங்கம் மற்றும் பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு ஓய்வூதியர் சங்கம் ஆகிய மூன்று சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத் திற்கு குமரவேல் தலைமை ஏற் றார்.

இதில் ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் பா.சௌந்தர பாண்டியன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க முன்னாள் மாநில உதவிச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியன், ஓய்வூதியர் மாநில உதவித் தலை வர் ரமேஷ், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில உதவிச் செயலாளர் ஜெ.அருண்குமார் ஆகியோர் தொழிலாளர் போராட்டத்தின் நிகழ்வுகள் குறித்து உரையாற்றி னர்.

பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைத் தலைவர் ஏ.அண்ணாதுரை உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர்.

முன்னதாக, நொய்டா தொழி லாளர்களின் போராட்டத்திற்கு ஆத ரவாக நடத்திய இந்த கூட்டுப் போராட்டத்தில் நொய்டா தொழிலா ளர்களுக்கு நிதி உதவி சேகரிக்கப் பட்டது.

முடிவில் பழனிவேல்சாமி நன்றி கூறினார். கோவை கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பிஜிஎம் அலுவல கம் முன்பாக பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், அகில இந்திய பிஎஸ்என் எல் டாட் ஓய்வூதியர் சங்கம், மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப் பந்த தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகளை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதி யர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ. குடியரசு தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.மகேஸ்வ ரன், துணைத்தலைவர் பாபு ஏ.ராதா கிருஷ்ணன், பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்க மாவட்ட நிர்வாகி வி.வெங்கட்ராமன், பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ஒய்.அப்துல் முத் தலிப் ஆகியோர் கண்டன உரை யாற்றினார்.

முடிவில், செல்வ நாயகி நன்றி கூறினார்.

ஈரோடு ஈரோடு டெலிபோன் பவன் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, பிஎஸ் என்எல் சங்கங்களின் ஒருங் கிணைப்புக்குழு தலைவர் எம்.நட ராஜன் தலைமை வகித்தார். ஒப் பந்த ஊழியர் சங்க மாநிலச் செய லாளர் எம்.சையத் இத்ரீஸ், ஒருங் கிணைப்புக்குழு மாவட்ட கன்வீனர் எஸ்.பாலு, ஓய்வூதியர் சங்க அகில இந்திய அமைப்புச்செயலாளர் என்.

குப்புசாமி ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். ஒருங்கிணைப்புக் குழு இணை கன்வீனர் கே.பழனிச் சாமி நன்றி கூறினார்.

தருமபுரி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவ லகம் முன்பு, பிஎஸ்என்எல் ஓய்வூதி யர் சங்க மாவட்டத் தலைவர் டி. பாஸ்கரன் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

இதில் சங்கத்தின் மாநில உதவிச்செயலா ளர் உமா ராணி, மாவட்டச் செயலா ளர் பி.கிருஷ்ணன், கிளைச் செயலா ளர் சி.முனிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.