தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பஞ்சப்படி வழங்கு! பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம்

21 May 2026, 12:23 am
பஞ்சப்படி வழங்கு! பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம்
<p><strong>பஞ்சப்படி வழங்கு! பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம்</strong></p><p>தருமபுரி, மே 20- ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய பஞ்சப்படியை உடனடி யாக வழங்கக்கோரி பிஎஸ்என்எல் ஓய்வுபெற்ற அதிகாரிகள், ஊழியர் கள், ஓய்வூதியர் சங்கங்களின் சார் பில் போராட்டம் நடைபெற்றது. 2026 ஜனவரி 1 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி உடனே வழங்க வேண்டும். மூன்று மாதத் திற்கு ஒருமுறை வழங்க வேண்டிய அகவிலைப்படி கால தாமதமின்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஓய்வுபெற்ற அதிகாரி கள், ஊழியர்கள், ஓய்வூதியர் சங்கங் களின் சார்பில் புதனன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது. அதன்ஒருபகுதியாக தருமபுரி பாரதி புரம் பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தர் ணாவிற்கு, ஓய்வூதியர் சங்கங்களின் தலைவர்கள் சி.முனியப்பன், ஆர். கோபாலன், தனபால் துரைசிங் ஆகி யோர் தலைமை வகித்தனர். இதில், பிஎஸ்என்எல் ஓய்வுபெற்ற ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் டி.பாஸ் கரன், ஓய்வுபெற்ற அதிகாரிகள் சங்க மாவட்டத் தலைவர்கள் வேடியப் பன், அஞ்சல் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி யன், அதிகாரிகள் சங்க மாவட்டச் செயலாளர்கள் கிஷோர் குமார், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில உதவிச்செயலாளர் உமாராணி, மாவட்டச் செயலாளர் பி.கிருஷ்ணன், மாவட்டத் தலைவர் பரிதிவேல், என்எப் டிஇ மாவட்டச் செயலாளர் கே.மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை அகில இந்திய பிஎஸ்என்எல் சங் கங்கள் மற்றும் கூட்டமைப்புகளின் சார்பில் கோவை மாவட்ட டெலிகாம் அலுவலக வளாகத்தில் மனிதச் சங் கிலி நடைபெற்றது. இந்த இயக்கத் திற்கு என்எப்டிஇ சங்கத்தின் மாவட் டச் செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமை ஏற்றார். இதில், பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் மகேஸ்வரன், மாநில உதவித் தலைவர் பாபு ராதாகிருஷ் ணன் மற்றும் ஏஐபிஎஸ்என்எல்இஏ சங்கத்தின் மாவட்ட நிர்வாகி சந் தோஷ்குமார் உள்ளிட்டோர் உரை யாற்றினர். முடிவில், ஏஐபிஎஸ்என் எல்இஏ சங்க மாவட்டத் தலைவர் கார்த்திகா நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.