நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மனு
yesterday
<p><strong>நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மனு</strong></p><p>கோவை, அக்.29-மூன்றாவது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த நாடாளுமன்றத்தில் வலியுறுத்தக்கோரி, பிஎஸ்என்எல் ஊழியர்களின் கூட்டமைப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மனு அளித்தனர்.</p><p>பிஎஸ்என்எல் ஊழியர்களின் கூட்டமைப்பின் கோவை மாவட்ட நிர்வாகிகள், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இந்நிகழ்வில், பிஎஸ்என்எல் சேவா அகில இந்தியப் பொருளாளர் வைரமணி, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.மகேஸ்வரன், பொருளாளர் ஏ.எஸ்.சாஹீன் அகமது, அதிகாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் காவேட்டிரங்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
