முந்தய பக்கம்

பிஎஸ்என்எல் ஊழியர்கள் தர்ணா

23 Jul 2026, 11:24 pm
பிஎஸ்என்எல் ஊழியர்கள் தர்ணா
<p><strong>பிஎஸ்என்எல் ஊழியர்கள் தர்ணா</strong></p><p>தருமபுரி, ஜூலை 23 – மூன்றாவது ஊதிய மாற்றத்தை உடனே வழங்கக்கோரி, பிஎஸ்என்எல் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், நாடு முழுவதும் மூன்று நாள் தொடர் தர்ணா நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக தருமபுரி பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு வியாழனன்று நடைபெற்ற தர்ணாவிற்கு, பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் டி. பாஸ்கரன், உதவித்தலைவர் என்.ரமேஷ், ஊழியர் சங்க மாநில உதவிச்செயலாளர் உமாராணி, மாவட்டச் செயலாளர் பி.கிருஷ்ணன், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை கோவையில், கோவை பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பாக பெருந்திரள் தர்ணா போராட்டம் நடைபெற்றது. சிஓசி கோவை மாவட்டத் தலைவர் ஏ.குடியரசு தலைமை ஏற்றார். இதில், நிர்வாகிகள் பாபு ராதா கிருஷ்ணன், வெங்கட்ராமன், மூர்த்தி, நிஷார் அகமது, லாரன்ஸ், முத்தலிப், பங்கஜவல்லி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram