ஒன்றிய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் தீவிரமடையும்! பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்கம் அறிவிப்பு
4 Oct 2026, 11:33 pm

ஒன்றிய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் தீவிரமடையும்! பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்கம் அறிவிப்பு

கோயம்புத்தூர், அக்.4-ஓய்வூதியர்களின் உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் தீவிரமடையும் எனப் பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆர்.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் வளாகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

‘பென்ஷன் வேலிடேஷன் சட்டத்தை’ திரும்பப் பெறுக!

“பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக தேசிய மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டங்களை அமல்படுத்தி ஓய்வூதியர்களின் உரிமைகளை அரசு மறுத்து வருகிறது. கடந்தமார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘பென்ஷன் வேலிடேஷன் சட்டம்’ மூலம் ஓய்வூதியத்தை மறுக்கவும், இது தொடர்பான வழக்குகளை நீதிமன்றங்களில் தொடர முடியாதவாறு தடைகளை ஏற்படுத்தவும் அரசு முயல்கிறது. இந்தச் சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தித் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், 8 ஆவது ஊதியக் குழுவில் ஓய்வூதியம் தொடர்பான பரிசீலனை நிபந்தனைகள் இடம்பெறவில்லை. பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கு 2017 ஜனவரி முதல் மாற்றியமைக்கப்பட வேண்டிய ஓய்வூதிய உயர்வு கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. சிஜிஎச்எஸ் மற்றும் பிஎஸ்என்எல் எம்ஆர்எஸ் போன்ற மருத்துவத் திட்டங்கள் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே செயல்படுவதால், போதிய மருத்துவர்கள் மற்றும் மருந்துகள் இல்லாமல் ஓய்வூதியர்கள் மருத்துவத்திற்காகலட்சக்கணக்கில் செலவு செய்யும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்க

ளின் சார்பில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தர்ணா போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலை

யில், வரும் நவம்பர் 25 அன்று தில்லி ஜந்தர் மந்தரில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்படவுள்ளது.

இதே கோரிக்கைகளை முன்வைத்து மாநில அரசு ஓய்வூதியர்கள் நவம்பர் 29-ல் ஆர்ப்பாட்டமும், டிசம்பர் 12-ல் தில்லியில் பேரணியும் நடத்தவுள்ளனர். அரசு கோரிக்கைகளை ஏற்கும் வரை நாடாளுமன்றத்திலும் வீதிகளிலும் போராட்டம் தொடர்ந்து நீடிக்கும்” என்றார்.