பிஎஸ்என்எல் கோரிக்கை தினம்
16 Jul 2026, 10:11 pm
<p><strong>பிஎஸ்என்எல் கோரிக்கை தினம்</strong></p><p>கோவை, ஜூலை 16- பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-ஐ வலுப்ப டுத்த வேண்டும். ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்கம், மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம் உள்ளிட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கோரிக்கை தின ஆர்ப்பாட்டங் கள் நடைபெற்றது. அதன்ஒருபகுதியாக கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பிஜிஎம் அலுவலகம் முன்பாக வியாழ னன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.குடியரசு தலைமை வகித்தார். மாவட்ட கன்வீனர் எஸ். மகேஸ்வரன், மாநில அமைப்பு செயலாளர் வெங்கட்ராமன் மற்றும் இணை கன்வீனர் ஏ.ஒய் அப்துல் முத்தலிப் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். பொள்ளாச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர் சங்க மாநில உதவித் தலைவர் பி.நிசார் அகமது, உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஈரோடு ஈரோடு டெலிபோன் பவன் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர் சங்க மாவட்ட உதவிச் செயலர் கே.என்.முகமது ரபீக் தலைமை வகித்தார். ஓய்வூதி யர் சங்க மேற்கு (பகுதி 1) கிளைச் செயலர் சௌந்தரராஜன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கினார். ஒருங்கிணைப்புக் குழு கன்வீனரும், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளருமான எஸ்.பாலு, ஒப்பந்த ஊழியர் சங்க மாநிலச் செயலர் எம்.சையத் இத்ரீஸ், ஓய்வூதியர் சங்க அகில இந்திய அமைப்புச் செயலர் என்.குப்புசாமி ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். நிறைவாக ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச் செயலர் கே.பழனிசாமி நன்றி கூறினார். சேலம் சேலம் சீரங்கம் பாளையம் அருகில் உள்ள பொது மேலாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் கன்வினர் ஹரிஹரன், தலைவர் தமிழ்மணி, இணை கன்வி னர் எம். செல்வம், நிர்வாகி கே.ஆர்.கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p>
