முந்தய பக்கம்

போனஸ் வழங்க வலியுறுத்தல்

29 Oct 2026, 12:38 am
போனஸ் வழங்க வலியுறுத்தல்
<p><strong>போனஸ் வழங்க வலியுறுத்தல்</strong></p><p>ஈரோடு, அக்.28-பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 8.33 சதவிகிதம் போனஸ் வழங்கக்கோரி ஈரோடு மாவட்ட பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சட்டப்பூர்வமான 8.33 விழுக்காடு போனஸ் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம், ஈபிஎப், இஎஸ்ஐ உள்ளிட்ட சமூக நல பாதுகாப்பு திட்டங்களை அமல்படுத்த வேண்டும். சம்பள பட்டியல் மற்றும் வருகைப்பதிவேடு அமலாக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர்செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்ட பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, பிஎஸ்என்எல்ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் சாந்தகுமார் தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் கே.பழனிச்சாமி துவக்கவுரையாற்றினார். அகில இந்திய துணைத்தலைவர் எம்.சையத் இத்ரீஸ் சிறப்புரையாற்றினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பாலு வாழ்த்திப்பேசினார். முடிவில், மாவட்ட நிர்வாகி எஸ்.கண்ணப்பன் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram