பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஆட்குறைப்பு: கண்டன ஆர்ப்பாட்டம்
2 Feb 2026, 4:51 pm
<p><strong>பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஆட்குறைப்பு: கண்டன ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>ஈரோடு, பிப்.2- பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தொடரும் ஆட்குறைப்பு நடவடிக் கையை கண்டித்து, ஒருங்கிணைப் புக்குழு சார்பில், ஈரோடு பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஊதியம் வழங்காமல் நிறுத்தி வைத்து, கட்டாய ஆட்குறைப்பு நடைபெற்றது. இதன் தொடர்ச்சி யாக தனியார் மயம் அனைத்து பிரிவுகளிலும் தீவிரப்படுத்தப்பட் டது. காவலர் பணியிடமும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட்டு வந் தது. இதற்கான ஒப்பந்தம் ஆண்டுக் கொருமுறை புதுப்பிக்கப்பட்டு வந்தது. இவ்வாறு 8மணி நேர வேலை என்ற அடிப்படையில் ஒவ்வொரு தொலைபேசி நிலை யத்திலும், 3 பேர் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். இறுதி யாக ஜன.31 ஆம் தேதியுடன் ஒப் பந்தம் காலாவதியான நிலையில், புது ஒப்பந்தம் போடப்படவில்லை. இதுகுறித்து தொலைதொடர்பு மாவட்டங்கள் மாநில பொது மேலா ளரை அணுகும் போது, சிக்கனம் என்ற பெயரில் ஒதுக்கப்படும் நிதியை குறைத்து ஆட்குறைப்பை நிர்பந்திக்கப்படுவதாக கூறப்படு கிறது. இந்நிலையில், ஈரோடு மாவட் டத்தில் தாலுகா மெயின் தொலை பேசி நிலையங்களான பெருந் துறை, பவானி, கொடுமுடி, மூல னூர், தாராபுரம், காங்கயம், கோபி மற்றும் சத்தி ஆகிய பகுதிகளில் பகல் நேர காவல் பணி புரிந்து வந்த ஒப்பந்த ஊழியர் பணியிடம் நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மூவர் பணியாற்றி வந்த இடத்தில் இரு வர் மட்டுமே என்ற நிலை உருவாக் கப்பட்டுள்ளது. அவர்கள் இருவ ரும் முதல் நாள் மாலை 5 மணியி லிருந்து மறுநாள் காலை 9 மணி வரை அதாவது 16 மணி நேரம் பணி யினை பகிர்ந்து கொள்ள வேண் டும். இடைப்பட்ட 8 மணி நேரத்தில் நிலையத்திலுள்ள மின்சாதன மற் றும் கருவிகள் உள்ளிட்ட தளவாட பொருட்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை. மேலும் விடுமுறை நாட்களிலும் இதே நிலைதான். இதுபோன்ற சமயங்க ளில் நடைபெறும் அசம்பாவிதங்க ளுக்கு அடுத்து பணிக்கு வரும் காவலரே பொறுப்பேற்க வேண் டிய சூழலும் உருவாக்கப்படுகிறது. இவ்வாறு ஆட்குறைப்பு செய் வதை கண்டித்து பிஎஸ்என்எல் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் திங் களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஈரோடு பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஒருங்கிணைப் புக்குழு தலைவர் வே.மணியன் தலைமை வகித்தார். ஒருங் கிணைப்பாளர் பாலு, இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனி சாமி, ஓய்வூதியர் சங்க அகில இந்திய அமைப்பு செயலாளர் என். குப்புசாமி, ஒப்பந்த ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எம்.சையது இத்ரீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ். சரவணன் நன்றி கூறினார்.</p>
